Saturday, June 18, 2016

வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கம் 2016 – "கென்டீன் கந்தையா"

ஆசிரியர் - இலங்கை இதழியல்

வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கத்தில் இவ்வாண்டு குறிப்பிடத்தக்க எந்தத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. முகாமைத்துவ ரீதியிலும் அதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.

வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தற்போதைய தலைவராக இருக்கிறார் எஸ். பிரேமநாதன். வீரகேசரி ஊழியர்களுக்கு ஏதாவது நல்ல திட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் செயற்படுபவர் பிரேம்.

ஊழியர் நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரேம் உரைநிகழ்த்தியபோது ஒரு சாதாரண ஊழியனின் எதிர்பார்ப்புகள் விளங்கின.

ஆனால் இன்று நடப்பது என்ன? பிரேமை வேலை செய்ய விடாமல் தடுப்பவர்கள் யார்?



விபரங்களை "கென்டீன் கந்தையா" சொல்கிறார் கேளுங்கோ:

VSWA க்கு கொமிட்டி ஆட்கள சிலெக்ட் பண்ணுற நேரம் வந்திச்சிங்க. ஏற்கனவே தலவரா இருந்த வாசுக்கு தலவரா வாறதுக்கு ஆச இருந்தாலும் சட்டம் அனுமதிக்கலீங்க.
கமிட்டி தலவரா எக்கவுன்ட்ஸ் நவீன கொண்டுவராதுதான் பெரியவங்கட விருப்பம். அத ஏற்கனவே நம்ம வெள்ளகாக்கா காதுக்கு தொரகுட்டி போட்டு வச்சிட்டாரு.

சரி நாம தானே தலவரு. இங்க வேற எவன் எப்லை பண்ண போறான்னு நெனச்சிட்டு நம்ம நவீனும் கனவுலகத்தில இருந்தாருங்க.
அதுக்கு நம்ம பிரேம் அண்ணா வச்சாரு பாருங்க ஆப்பு!
கமிட்டி தெரிவு செய்ய க்ளோசிங் டேட் முடிஞ்சவுடன எல்லாருக்கும் அதிர்ச்சி. அட நிர்வாகம் ஒன்ன நெனக்க இங்க வேற ஏதோ நடந்திருச்சேன்னு.

கூட்டத்து அன்றைக்கு முதல்நாளும் அன்றைய நாளும் இதேதான் பேச்சு. 

பிரேம நியமிக்கிறதில எங்க வெள்ளகாக்கா குமாருக்கு எந்த விருப்பமும் இல்ல. எப்படியாவது மாத்துங்கனு தொரகுட்டிக்கு சொல்லிப் பார்த்தும் அது சரிவரல.

சரி, பிரேம் கடைசி நேரத்தில முடியாதுனு சொல்லிருவாருனு பார்த்தாங்க. ஆனா அவரு சொல்லவேயில்ல.

அப்போ வெள்ளகாக்கா நம்ம அமெரிக்கரு ஒரு முடிவ கொண்டுவந்தாரு பாருங்க. இப்போ உபதலைவரா இருக்கிறவருதான் அடுத்த தலைவரா வரலாம் னு சொல்லிட்டாரு.

அதுக்கு அவருடைய அடுத்த ஆளையும் அங்கேயே சொல்லிட்டாரு.

இதனால நவீனுக்கு பெரிய தலவலி போங்க. நம்ம நிர்வாகத்துக்கும் செம்ம கடுப்பு. வாசுவுக்கோ கொண்டாட்டமுங்க ( :P ) .

பிரேம் ஏதாவது செய்திட்டு போகட்டும் அனுமதி கொடுக்கிறது நான்தானே என வெள்ளகாக்கா மறைமுகமா சொல்லியிருக்காரு. அதனால சங்கத்தில ஏதும் உருப்படியா நடக்க விட மாட்டேன்றாங்க. இதுதான் உண்மையான விஷயமுங்க.

போனவருஷம் வருடாந்த பொதுக்கூட்டம் நடத்தலீங்க. அத நடத்தாம விட்டது வெள்ளகாக்கா. இந்த வருஷம் ரெண்டையும் சேர்த்து நடத்துவோம்னு நழுவிட்டாரு.

ரமாவ கூட்டிவந்து கோடிகோடியா செலவழிச்சு கூத்தடிக்க முடியும்னா ஏன் நம்ம கமிட்டி பொதுக்கூட்டத்த நடத்த முடியாது?

பிரேம் பாவமுங்க. இப்படித்தான் வீரகேசரி நிர்வாகம். 

நல்லா தெரிஞ்சுக்கோங்க.
நம்ம வெள்ளதொரைக்கு இங்கிலீசு பேச தெரிஞ்சவன் மட்டுமே அறிவாளி. ஆனா பிரேம் மாதிரி உண்மையா மனசு தூய்மையோட வேல செய்ய போனா அவன் கோமாளி.

என்னே உலகமடா? சொன்னா குத்தமடா!

No comments:

Post a Comment