Tuesday, June 14, 2016

கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு!

(ரா. செந்தூர பாண்டியன்)

வீரகேசரி வெளியீடுகள் பலவற்றை நீண்டகாலம் வழிநடத்தியவர் பெஸ்தியாம்பிள்ளை ஜோன்சன். இன்று 50 வருடங்களை எட்டியிருக்கும் மித்திரனின் ஆசிரியராக திகழ்ந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

அதன்பிறகு கலைக்கேசரி இதழின் உதவி ஆசிரியராக இருந்து பல்வேறு வகையில் அதன் வளர்ச்சிக்கு பணியாற்றினார்.

இலங்கை விகடன் சஞ்சிகையின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட ஜோன்சன் வீரகேசரி நிறுவனத்தில் இணைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த  நிலையில் ஜோன்சன் வீரகேசரி நிறுவனத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கட்டுரை எழுதிய காரணத்துக்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஒரு பத்திரிகை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஜோன்சனுக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டது நியாயமா?

அவ்வாறு கட்டுரை எழுதியது தவறு என்று வைத்துக்கொண்டாலும் அதற்காக ஒரு குடும்பஸ்தரின் வயிற்றில் இப்படியா அடிப்பது?

ஜோன்சன் இரவு பகல் பாராமல் வேலை செய்து வந்தார். மித்திரனில் பணியாற்றியபோது காலை 9 மணிக்கு வேலைக்கு வரும் அவர் மறுநாள் அதிகாலை 1 மணி வரை வேலை செய்தார். 

ஏன், கலைக்கேசரியில் பணியாற்றியபோது கூட அவரின் பங்கு அளப்பறியது. கலைக்கேசரியில் எழுத்துப் பிழைகள் வரக்கூடாது என்பதில் அவர் சிரத்தையுடன் இருந்தார். அதில் சிறப்பான கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பதில் பலருடனும் தொடர்புகளை மேற்கொண்டு இயங்கினார்.

வீரகேசரிக்கு ஒரு விடயத்தை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

ஜோன்சன் தனது கையடக்கத்தொலைபேசியில் தான் அதிக தொடர்புகளை மேற்கொள்வார். அவை அனைத்தும் வீரகேசரிக்காகவே. அவருடைய மாதாந்த தொலைபேசி கட்டணம் 5 ஆயிரத்தை தாண்டியிருக்கும். எனினும் அவர் அதனையெல்லாம் கருத்திற்கொள்வதில்லை.

இன்று ஜோன்சன். நாளை யாராகவும் இருக்கலாம். வீரகேசரி நிறுவனத்தைச் சொல்லி தப்பில்லை. அங்கு இருக்கும் சில புல்லுறுவிகளால் தான் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு புள்ளியிட்டவர் யார்?

இத்தனை விடயத்தையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டு இதையும் சொல்லாமல் விட்டால் காளி தெய்வம் கோபிக்காதா என்ன?

சூதொடச்சானும் ஜோன்சனும் நல்ல நண்பர்கள் (ஒரு காலத்தில்). அவர்கள் இறுதியாக இணைந்து உற்சாக பானம் அருந்தினர்.
அவ்வேளையில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. ஜோன்சன் எதையும் நியாயமாக கதைக்கக் கூடியவர். சூதொடச்சானைப் பற்றி எல்லாருக்கும் தெரியும் தானே?

குனிந்து குனிந்தேனும் காரியத்தை கச்சிதமாக சாதிப்பான் சூதொடச்சான். 

நிற்க,
இந்த நிலையில் அந்த கருத்து முரண்பாட்டின் பின்னர் தான் பூதாகரமாக மாறியது விடயம்.
எப்படியாவது ஜோன்சனை நீக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான் சூதொடச்சான்.

அதற்காக திட்டமும் தீட்டினான். 

இறுதியில் சாதித்தும் விட்;டான்.

சூதொடச்சானின் கள்ளத்தனங்களை அறிந்தவர் யாராயினும் அவர்களை தூக்கியெறிவது அவனுடைய பழக்கம் தானே? இல்லையில்லை, வழக்கம் தானே!

(இதன் அடுத்த கட்டம் விரைவில்)

No comments:

Post a Comment