Tuesday, January 10, 2017

சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா?

(ஆதி இந்திரச்செல்வன்)

தெற்கு கடற்கரை- குளிரில் நடுங்கும் மோகம்பிடித்த அலைகள் அள்ளிப் புரண்டு கரைதேடும் அதிகாலைப் பொழுது!

இது புயலாகிடுமோ என அச்சம் கொள்ள வைக்கும் மிதமான வேகத்துடன் தென்றல் - ஆங்காங்கே தென்னை மரங்கள் இசைபாட நெருக்கமான தாழை மரங்களுக்கிடையே காதலர்களின் கூடல்!

ரம்மியமான விடுதி. தென் தாய்லாந்தின் புல்வெளிகளையும் மத்திய இங்கிலாந்தின் சிற்றில்லங்களையும் போல வடிவமைக்கப்பட்ட இடம்.
அது பிரபலங்கள் மாத்திரமே கூடும் இடம்.

உனவட்டுனவில் மிகப் பிரசித்தியான விடுதி.

அன்று - கடந்த வருட இறுதி மூன்று மாதங்களில் ஒருநாள்..!

ஆண் முன்செல்ல துணை பின்செல்ல ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அறைக்குள் செல்கிறார்கள்.

கீழே குளியலறை. சிறு மேல்மாடியில் படுக்கையறையுடன் இணைந்ததான இடம்.
முற்றவெளியில் தடாகம். அதனை அண்மித்ததாக இதேபோல் சிற்றில்லங்கள் பல.

அங்கே, தொழில் நிமித்தம் இரண்டுநாள் தங்கியிருக்கிறேன். நான் மட்டுமல்ல எனது துறைசார் பலரும் அங்கே இருக்கிறார்கள். நல்லிணக்கம் தொடர்பான செயலமர்வு அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் அந்த ஜோடி உள்ளே வருகிறது.

உண்மையை சொன்னால் கதையின் சுவாரஷ்யத்துக்காக ஜோடி உள்ளே வந்தது என்று கூறினேன். ஆனால் ஜோடி வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

அவர்கள் மதிய போசனத்துக்காக பொதுவெளியில் (அனைவருக்கும் உணவு பரிமாறும் இடம்) உட்கார்ந்தபோதுதான் இவர்களா என சிலாகித்தேன்.

அவள் குளிர்கண்ணாடி அணிந்திருந்தாள்.

சில தசாப்தங்களை தாண்டிய வயதென்றாலும் இளம் வயதையொத்திருந்தாள். சிவப்பு நிற சல்வார். காலில் கொஞ்சம் மெத்தமான கொலுசு. கைக்கடிகாரம் இருக்கவில்லை. சிவப்பு நூல் கட்டியிருந்தாள்.

பெருத்த பின்னழகையும் மொத்தமான முன்னழகையும் காட்டும் விதமாக இருந்தது அந்த இறுக்கமான சல்வார்.

அண்ணன், ம்ம்…இளம் சிவாஜிபோல கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

கறுப்பு நிற மேற்சட்டை, இளம் சாம்பல் நிற காற்சட்டை, சப்பாத்து, வெண்ணிற கடிகாரம் அணிந்திருந்தார். மேற்சட்டைக்கு உள்ளே உள்சட்டை இல்லை என்பதை புடைத்த வயிறு காட்டிக்கொண்டிருந்தது.

இவர்கள் எதற்காக இங்கே வந்தார்கள்? மிக நீண்டநாள் பழக்கம் போல சிரித்துச் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஊகிக்க முடியவில்லை.

மிதமான காற்றின் ஓசை அவர்களுடைய பாஷைகளை விழுங்கிக்கொண்டிருந்தது.

நான்….கவனிக்கத் தொடங்கினேன்.

எனது செயலமர்வுக்குச் செல்லாமல் தூரத்தேயொரு தென்னைமரத்தில் சாய்ந்தவாறு பார்த்துக்கொண்டிருந்னே;. சுமார் 45 நிமிடம் உணவுக்காச செலவழித்தார்கள்.

அதன் பின்னர் மெதுவாக அந்த சிற்றில்லத்துக்கு நடந்து சென்றார்கள்.
அதுவரை அண்ணனின் கை அவள் மீது படவில்லை.

அறையின் கதவை நெருங்கும்போது அண்ணன் மெதுவாக அவளின் புடைத்திருந்த பின்பருவத்தில் கை வைத்தார்.

மயிர் கூச்செறிதலை கேள்விப்பட்டிருக்கிறேன் - அன்று சத்தியமாக உணர்ந்தேன்.

என் ஆண்மை இயல்பை மீறிக்கொண்டிருந்தது.

கதவை மெதுவாக தாழிட்டுக்கொண்டார்கள்.

ஐயோ… என் கற்பனை குதிரையை தட்டி தட்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு உண்மையாகவே செயலமர்வுக்கு செல்ல மனமில்லை.

ஓடிச்சென்று தலைவலிக்கிறது. ஓய்வில் இருந்துவிட்டு வருகிறேன் என அனுமதி பெற்று மீண்டும் தென்னை மரத்தடிக்கு வந்தேன்.

மெதுமெதுவாக ஒவ்வொரு தென்னை மரத்திடமும் அடைக்கலம் பெற்று அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சுமார் 40 மீற்றர் தூரத்துக்கு வந்துவிட்டேன்.
நான் கற்பனையில் மிதக்க உள்ளே உச்ச இன்பத்தில் மிதந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை ஊகித்துக்கொண்டேன்.

"மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
கால நேரமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா"
இந்தப் பாடல் என் மனதில் இழையோடியது.

ஆஹா… குடும்ப குத்துவிளக்கு போல அலுவலகத்தில் இருக்கும் இந்த அக்காவா இன்பம் பகிர்கிறார்?

வாயை திறந்தால் தத்துவத்தை கொட்டும் இந்த அண்ணனா உச்சம் காண்கிறார்?

நம்பவே முடியவில்லை.

அவர்கள் கட்டிலில் கொஞ்சலும் கெஞ்சலும் காமமும் கூடலுமாக இப்பதை நான் கற்பனையில் நாணேற்றி மன்மதனுக்கு அம்பு விட்டுக்கொண்டிருக்கிறேன்.

சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் வெள்ளை கறுப்பு உடையணிந்த இளைஞன் தேநீர் எடுத்துக்கொண்டு சென்றான்.

மேல் மாடியின் முன்புறத்தில் வந்து அவர்கள் தேநீர் அருந்தினார்கள்.
இப்போது - அவள் இளம் பச்சை சல்வாரில் - அண்ணன் இள நீல லினன் மேற்சட்டையில்!

அங்கே ஆடை மாற்றப்பட்டிருக்கிறது என்றால் காமம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அதுவும் அதிக பட்சமாகவே.

அவர்கள் மன்மதனால் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள். இன்பத்தை-இன்பத்தின் உச்சத்தை அனுபவிக்கிறார்கள்.

மாலை 4 மணியளவில் அந்த ஜோடி அங்கிருந்து சென்றது. அவர்கள் வரவேற்பறைக்கு வரவில்லை. உதவியாளரை அழைத்து அங்கேயே கொடுப்பனவுகளை செலுத்தியிருந்தார்கள்.

இது அவர்களுடைய தனிப்பட்ட விடயமாக இருக்கலாம். இதை ஏன் நான் இங்கே பகிர்கிறேன் என்றால்…. இந்த இருவரும் தான் பல வதந்திகளால் பலருடைய வாழ்வில் புகுந்து விளையாடியவர்கள்.

ஆதலால் இதனை இங்கு எழுத வேண்டும் என நான் நினைத்தேன். இலங்கை இதழியல் ஆசிரியர் இதனை பிரசுரிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இப்போது சொல்லுங்கள்…. சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா?

(இது எமக்கு கிடைக்கப்பெற்ற ஆக்கம். விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு பிரசுரிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்களின் நன்மை கருதி பெயர் கூறப்படவில்லை. நன்றி. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - ஆசிரியர் -இலங்கை இதழியல்)

விரைவில் வெளிவரவுள்ள பதிவுகள்!




  • சுமனின் வெளியேற்றம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் (ஆ.இராஜபுத்திரன்)
  • சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா?
    (ஆதி இந்திரச்செல்வன்)
  • கலண்டர் சுத்துமாத்து - ஆதாரங்களுடன் ஆராய்வு
    (யுகன் நடராஜா)
  • ஏக்கலையில் இரும்புக்கொள்ளை- சிங்களவர்களுக்கு விற்ற பச்சோந்தி
    (ஆசிரியர்-இலங்கை இதழியல்)
  • ஆடு பாம்பே…விளையாடு பாம்பே..!
    (வை.ராஜா)