Saturday, January 7, 2017

கதவைத் திற காற்று வரட்டும்!

(ம. செங்கோட்டுவன்)

இந்த வலைத்தளத்தில் எழுதப்படும் எந்த விடயங்களும் தகுந்த ஆதாரங்கள் இன்றி பிரசுரிக்கப்படுவதில்லை. நாம் இப்போது பாரிய வலையமைப்பாக செயற்பட்டு வருகிறோம்.

வீரகேசரிக்கு எதிராக செயற்படுவது எமது குறிக்கோளல்ல. அங்கு உள்ள கறுப்பாடுகளின் சுயரூபங்களை வெளிக்கொண்டுவருவதே எமது எண்ணமாகும்.


ஏக்கலை புரொஜெக்ட் பற்றியும் அங்கு நடைபெற்ற, நடைபெறும் ஊழல்கள் பற்றியும் நாம் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதனால் சம்பந்தப்ப்பட்டவர்கள் வெள்ளவத்தை பகுதியில் தண்ணியடித்து உளறிக்கொட்டி இன்னும் புலம்பிக்கொண்டிருப்பவர்களையும் நாம் அறிவோம்.

இருக்கட்டும்.
ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாவுக்கு வெள்ளவத்தை பிரெட்றிகா வீதியில் வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியிருக்கிறார் தயாளன்.

ஒரு சாதாரண பதவியில் இருந்து சற்று காலத்துக்கு முன்னர் தான் சீனியர் மெனேஜராக பதவி உயர்வு பெற்றார். அதற்குள் எப்படி இந்தளவு பணம் சேகரிக்க முடியும் என யோசித்தீர்களா?

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் நண்பர்களே,

ஒரு சீனியர் மெனேஜர் - அந்தப் பதவி கிடைத்து 3 மாதங்கள் பழைய சம்பளத்துடனே வேலை செய்ய வேண்டும். 3 மாதங்களுக்குப் பிறகுதான் அவரது பதவி உயர்வுக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும். இது வீரகேசரியில் உள்ள நடைமுறை.

சரி. இந்த ஒரு கோடியே 30 இலட்சம்….. (வாயைப் பிளக்காதீங்க மக்களே) எப்படி கிடைத்தது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. ஏக்கலை புரொஜெக்ட் வாரிக் கொடுத்த பணம்தான் இது. இனி என்ன அவருக்கு?

கதவைத் திற காற்று வரட்டும்! அப்படித் தானே!

சொப்பன சுந்தரி மேல்மருவத்தூர் அம்மையாருடன் சேர்ந்து கொமிஷன் அடித்த பணம் தான் இது.

நாம் ஒரு கேள்வி கேட்கிறோம் - நியாயமா இல்லையா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு சீனியர் மெனேஜருக்கு - 40 ஆயிரம் ரூபா வாகன கொடுப்பனவு வழங்கப்படுகிறது. 100 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுகிறது.
இந்த 100 லீற்றரை மாதாந்தம் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் 100 லீற்றரையும் அலுவலக தேவைக்காக பயன்படுத்துகிறார்களா?

உதாரணத்துக்கு ஆம குஞ்சான்   யாழ்ப்பாணத்துக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அலுவலக வாகனத்தை, சாரதி சகிதமாக பெற்றுக்கொண்டுதானே செல்கிறார்? அப்படியானால் இந்த செலவீனங்களுக்கு என்ன அர்த்தம்?

இவை அனைத்தும் எங்களுடைய உழைப்பு. எங்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டு யார் யாரோ வாழ்கிறார்கள்.

நாம் எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த செலவீனங்களை குறைத்து ஆசிரிய பீடத்தில் உள்ளவர்களுக்காவது சம்பளத்தை அதிகரித்தால் என்ன?

ஒரு கோடிக்கு உரிய கணக்கு, அது பெறப்பட்ட வழிமுறைகளை நாம் விரிவாக தேடிக்கொண்டிருக்கிறோம். இன்று நாளை அல்லாவிட்டாலும் என்றாவது நாம் அதை வெளிப்படுத்துவோம்.

இங்கு மற்றுமொரு உண்மைத் தகவல் -
எம்.டி. கையொப்பமிட்ட வெற்று காசோலைகள் சொப்பன சுந்தரியிடம் உண்டு. எம்.டி. வெளிநாட்டுக்குச் செல்லுமுன்னர் இவ்வாறு கையொப்பமிட்டுச் செல்வது வழமை.

(இன்றும் கூட 6 காசோலைகள் சொப்பன சுந்தரியிடம் (வித் எம்.டி.ஸ் சிக்னேச்சர்) இருக்கின்றன.

இந்த மாதிரி நேரத்தில் தான் வெளியில் கொட்டேஷன்கள் ஏற்கப்பட்டு மிக சூட்சுமமான முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது.

இதன் சூத்திரதாரி யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சேர்க்குலேஷன் ஜோன்சன் ஏக்கலை புரொஜெக்டில் நன்றாக பிழைத்துக்கொண்ட இன்னொரு நபர். அவருடைய ஏரியா என்பதால் புகுந்து விளையாடினார். இந்த விடயம் எம்.டிக்கும் நன்றாகத் தெரியும்.

வீரகேசரியில் யாராவது முடியுமானால் ஜோன்சனின் வீட்டை போய் பாருங்கள். டொனல்ட் ட்ரம்பின் தங்க மாளிகைக்கு நிகராக வெள்ளி மாளிகை கட்டியிருக்கிறார். இவ்வளவு கோடி கோடியான பணம் எங்கிருந்து?

சாதாரண மனிதராக வலம் வரும்போது கிடைக்காத சொர்க்க வாழ்க்கை இப்போது கிடைத்தது எப்படி?

சிந்தியுங்கள் மக்களே, இது நமது உழைப்பு, நமது பணம்.

இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. எமது குழு மிகத் தீவிரமாக இறங்கி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

விரைவில் முக்கிய தகவல்களுடன் சந்திக்கிறோம்.

நன்றி.

(சிந்தியுங்கள் - செயற்படுங்கள் - நம் வாழ்க்கை நம் கையில்)

Tuesday, January 3, 2017

மெட்ரோ நியூஸ் சலசலப்பு!


(எல்.தேவ சுகந்தராஜா)

மெட்ரோ நியூஸ் பக்க வடிவமைப்பு பிரிவில் தொழில்புரிந்த சுமன் திறமைசாலி. மெட்ரோ நியூஸை உயர்த்தியவர்களில் அவரும் ஒருவர்.

ஆனால் அவருடைய அமைதியும் பக்குவமான சுபாவமும் காரணமாக அவர் வெளியில் பேசப்படவில்லை. முகாமைத்துவத்துக்கும் அவருடைய திறமை தெரியவில்லை.

வீரகேசரி நாளிதழ், வார இதழ்களில் உள்ள வடிவமைப்பாளர்களுக்கு எந்தளவுக்கு நிறுவனம் அடையாளம் கொடுக்கிறதோ அந்தளவுக்கு மெட்ரோ நியூஸ் வடிவமைப்பாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் எந்தவொரு பயிற்சிக்கும் அனுப்பப்படுவதில்லை. இது நிதர்சனமான உண்மை.

இப்படியிருக்கையில் அண்மையில் சுமன் மாற்றிடத்துக்கு சென்றிருக்கிறார்.
சுமனுக்கு சம்பளம் 17ஆயிரம் ரூபா. இந்த 17 ஆயிரத்தைக் கொண்டு என்ன செய்துவிட முடியும்?

உணவு, வீட்டுக் கூலி, உடை, பிரயாணம், இதர செலவுகள் என எத்தனை இருக்கிறது. அதுவும் ஒரு தந்தையாக இந்த சொற்ப சம்பளத்துக்கு தொழில் புரிய முடியாது.

இதனை அவர் நீண்டகாலமாகவே கூறிவந்திருக்கிறார். ஆனால் யாரும் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை.

உதாரணத்துக்கு இப்படி வைத்துக்கொள்வோம்.

சீனியர் மெனேஜர் ஒருவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. தொழில் நிமித்தம் ஊரிலிருந்து கொழும்பில் வந்து தங்கியிருக்கிறார் என்றால்…

அவர் இந்த சம்பளத்துக்கு வேலை செய்வாரா?

அதேபோல்தான் சுமனுக்கும் அவரது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தவறில்லைதானே? அதற்கு முகாமைத்துவம் எந்தளவுக்கு ஒத்தாசை வழங்கியிருக்கிறது?

ஏனோதானோ என எதேச்சையாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாராயணர்கள் போல சீனியர் மெனேஜர்ஸ் தலையாட்டுவதும் பிடிக்காத சந்தர்ப்பத்தில் வெளியே போ என சொல்லுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ….பழையவர்கள் போய்விட்டால் இளையவர்களை கொண்டு பேப்பர் நடத்தலாம் என்பதுதான்.

அது தவறானது. பழையவர்களின் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இல்லைதானே? அவர்கள் வீரகேசரிக்காக வாழ்ந்து பழகி ஒத்திசைந்துபோனவர்கள்.

ஆனால் இதனை முகாமைத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை.
இந்த விடயத்தை சொல்லப்போன சாதுராமனுக்கு இப்போது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

சாதுராமன் மிக நேர்மையான தொழில் பக்தி மிக்க மனிதர். அவர் எப்போதும் நேர்மையாக பேசுபவர். அவர் சுமனுக்காக நிறையதடவை வாதாடியும் ஈற்றில் ஆம குஞ்சு (அதாங்க… பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்கின சொங்கி) வெற்றிபெற்றுவிட்டது.

சுமன் விலகிச்சென்ற விவகாரம் இப்போது வேறு விதத்தில் வீரகேசரியை ஆடச் செய்துள்ளது.

அதனை அடுத்த பதிவில் தருகிறோம்.

Sunday, January 1, 2017

மீண்டும் களத்தில்!



(பா.ருத்ரநாராயணன்)



சும்மா…அவங்க சொல்லுறாங்க, இவங்க சொல்லுறாங்க.. போலீஸ்ல என்ட்ரி, சிஐடி ல என்ட்ரி னு சொல்லி பயமுறுத்துனா…

ஐயோ குமாரு
ஆள விட்டுருங்க. உங்க கால்ல விழுறேன்னு சொல்லுறதுக்கு நாங்க என்ன பன்னிக் கூட்டங்களா?
ஒவ்வொருத்தனையும் சிங்களா தாக்குற சிறுத்தைகள் டா.

வந்திட்டோம்னு சொல்லு
திரும்ப வந்திட்டோம்னு சொல்லு

2016இல லீவு கொடுத்திட்டு எப்படி போனோமோ
அதைவிட தைரியமா திரும்ப வந்திட்டோம்னு சொல்லு!


மெட்ரோ நியூஸில் நடந்த பரபரப்பான கதையும் அதற்குப் பின்னரான சலசலப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

கோடாரிக் கொம்பன் டா!
தப்புனு தெரிஞ்சா தலைய வெட்டவும் பயப்படமாட்டான்.