Saturday, April 18, 2020

வெளியில் உள்ள அத்தனை பேரும் புத்தன், காந்தி இல்லீங்க!

-ஆதிரேயன் சந்தோஷ்ராஜ்-

பத்திரிகைத் துறையில் பெண்கள் தொழில்புரிவது பெரும் சவாலான விடயமாகும். ஊடகத்துறையில் பெண்கள் என்றாலே அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குக் குறைவிருக்காது.

பத்திரிகைத் துறையில், ஆரம்பகாலங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றச் செயல்களுக்கான உந்துதல்கள், மறைமுக செயற்பாடுகள் இருந்துதை மறுக்க முடியாது. அவற்றை எதிர்த்துத் தாண்டி வந்தவர்கள் இருக்கிறார்கள். எதிர்க்க முடியாமல் தமது இலட்சியங்களைத் துறந்து வீட்டுக்குள் முடங்கிப் போனவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் பிற்போக்கில் அவற்றில் மாற்றங்கள் இடம்பெறாமலும் இல்லை. நான் என்ன சொல்ல விளைகிறேன் என்பது அந்தத் துறையில் பணியாற்றும் சாதாரண சேவகர் முதல் முகாமைத்துவ அங்கத்தவர் வரை அனைவரும் அறிவர்.

இது இவ்வாறிருக்கையில், இரத்தினசபாபதி பிரபாகன் மாத்திரம் இதற்கு விதி விலக்கானவர் அல்ல. அவரது சேஷ்டைகள் ஏராளம். அவரோடு தாராளமாக இருந்தவர்களும் ஏராளம்.

கடந்த காலங்களில் பல்வேறு கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றமை இதற்குச் சான்றாகும்.

சரி, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு இதுவும் காரணமா என்றால் நிச்சயமாக எம்மையறியாமல் ஆம் என்றே தலையசையும்.

அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்களை சுருக்கமாகப் பதிவிடுகிறேன். இவை வெறுமனே கட்டுக்கதைகள் அல்ல. நாம் எழுதினால் ஆதாரங்களோடு எழுதுவோம் என்பதை வாசகர்கள் நன்கறிவர்.

எடிட்டோரியலில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு தொடர்ந்து இம்சை கொடுத்து வந்துள்ளார் பிரபா. வழமையாக பெண்ணொருவரை தனக்கு முன்னாள் இருக்கச் செய்து அழகு பார்த்து எழுதச் சொல்லுவதும் அவ்வப்போது காம மொழிகளை அவிழ்த்து விடுவதும் அவருக்கு கைவந்த கலை.

“ஏனம்மா.. நேத்து ஒரு படம் பார்தேன். அதில ரெண்டு ஜோடி ரொம்ப அழகா டான்ஸ் பண்ணுவாங்க. மியுசிக்கும் நல்லாவே இருந்தது. கொஞ்சம் பொறு… அந்தப் பாட்டு……… சூர்யாட கடைசியா வந்த பாட்டுல ஒன்டுதான்மா…. யோசிச்சு சொல்றேன்.

இல்ல… நான் சொல்ல வந்தது.. அந்த நடிகைக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கிடையாது. அவள் வளைந்து நெளிந்து டான்ஸ் பண்ணும்போது சத்தியமா உங்கள தான் நினைச்சேன்….”

இப்படிச் சொல்லி…. ஓர் அசட்டுச் சிரிப்போடு பேச்சுவார்த்தைக்குப் புள்ளியிடுவார் தங்கத்துறை பிரபா.

ஐயோ… எப்படியெல்லாம் பேசுகிறார்…. அப்படியே ஒரு தட்டைப் பிடித்தால் தேனும் பாலும் தங்கமும் அல்லவா நிறையும் என யோசிப்பவர்கள் பலர். அப்படி யோசித்து மாயச் சக்கரத்துக்குள் கட்டுண்டவர்கள் பலர்!

இப்படி சமீபத்தில் ஒரு பெண்ணுடன் உரையாட முற்பட்டு அது படுகேவலமாகிப் போனது.

“இந்தாளு என்னக்கா இப்படியெல்லாம் நடந்துகிறாராரு, ரொம்ப மோசமான ஆளு அக்கா” என ஓர் அக்காவிடம் அந்தப் பெண் கடிந்துகொண்டபோது…..

அதனைக்கேட்டு சர்வ சாதாரணமாகக் கடந்து போனாராம் அந்த அக்கா!
(இதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்)

இந்த விடயம் எடிட்டோரியலையும் தாண்டி, கென்டீனில் ஓட்டையில்லா உழுந்து வடை விற்கும் அண்ணன் வரைக்கும் நகர்ந்திருக்கிறது.

கொசிப் என்றால் நம்மவர்களுக்கு சொல்லவா வேண்டும்? அதிலும் கசாமுசா என்றால் கண்கள் இருமடங்கு திறந்து கதைகேட்குமே தோழர்களே!

வித்தியாதரனின் பாசறையில் பத்திரிகை வடிவமைப்பு படித்த ஓர் இளைஞன் வாரவெளியீட்டுப் பிரிவில் இணைந்திருக்கிறான். அவனைச் செல்லமாகக் கொஞ்சிக் குழாவியிருக்கிறார் பிரபா.

திறமை வாய்ந்த அவனும் இசைந்துகொடுத்து செயற்பட்டிருக்கிறான்.

நட்பின் உச்சம் அதிகமாகி தன்னுடைய ஐபோன் அப்டேட் அனைத்தையும் அந்தச் செல்லத்தம்பிiயை செய்யுமாறு பணித்திருக்கிறார்.

பையனும் கில்லாடிதான். தனக்குத் தேவையானவற்றை பிரத்தியேகமாகச் சேகரித்துக்கொண்டுள்ளான்.

பின்னாளில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் எழ, அந்தப் பையன் விரட்டப்பட்டுள்ளான். (இவ்வாறு பல சம்பவங்கள், அனுபவங்கள் உண்டுதானே ராஜா!)

அவன் போகும்போது சும்மா போகவில்லை, சங்கை ஊதிவிட்டுச் சென்றிருக்கிறான்.

பிரபாவின் அந்தரங்கம், தனிப்பட்ட பயணப் படங்கள் அனைத்தையும் பிரதியிட்டு ஹெச்.ஆர் இடம் பகிர்ந்துவிட்டுச் சென்றிருக்கிறான்.

அது பிரபாவின் தனிப்பட்ட விடயம் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் அலுவலகக்காரரர்களே என வியந்திருக்கிறது முகாமைத்துவம்.

இனி, இவையெல்லாம் நடந்தும் அப்பனே முருகா எனச் சொல்லியவாறு சாயிபாபாவைக் கும்பிட்டு உட்கார்ந்திருந்தவருக்கு விழுந்தது அடி!
இணையத்தளம், நவீன தொழில்நுட்பங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத பிரபாகரனால் இந்த ஊரடங்கு நிலைமையில் பத்திரிகையை நடத்திச் செல்ல முடியவில்லை.

வீரகேசரி வார வெளியீட்டின் செய்திகளில் அண்மைய 3 ஆண்டுகளாக தரம் காணப்படவில்லை. ஏனோ தானோ என செய்திகள் வெளியிடப்பட்டு வந்தது. கட்டுரைகளும் அவ்வாறுதான்.

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக ஐந்து பக்கங்களில் இணையத்தளத்தில் வெளிவரும் கட்டுரைகள் தான் வெளிவந்தன. அதைக்கூட அவரால் தடுக்க முடியவில்லை.

தொழில்நுட்பம் என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரைகளும் ஏற்கனவே வெளியாகிய கட்டுரைகளும் பிரசுரமாகின. குறுக்கெழுத்துப் போட்டியிலும் பல பிழைகள் எழாமல் இல்லை.

சமகால அரசியல் பகுதிய தரமற்றுப் போனது, மலையகப் பகுதியில் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே இடம் வழங்கப்பட்டது. இலக்கியப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்பட்டது. புதியவர்களை இணைத்துக்கொள்வதிலும் வாய்ப்பு வழங்குவதிலும் பிரபா அக்கறை காட்டவில்லை.

வீரகேசரி வார வெளியீட்டில், கோழிக் குஞ்சிக்கு ஆண்குழந்தை பிறந்தது எனத் தலைப்பிட்டாலும் அதையும் வாசிப்பார்கள் என அசட்டு நம்பிக்கையில் இருந்த பிரபாகனுக்கு இது நல்ல பாடம். அவருக்கு மாத்திரமல்ல, தாங்கள்தான் ஜாம்பவான்கள் என நினைக்கும், தலைக்கணமுடைய அனைவருக்கும் இது பொருந்தும்.

எது எப்படியோ, கர்மா மறுபுறம் சுழல ஆரம்பித்திருக்கிறது.

எல்லாம் மனிதர்கள்தானே, சில வீக்னஸ் இருக்கத்தானே செய்யும் என இலகுவாய் கடந்துபோய்விடலாம். ஆனால் அடுத்து வருபவர்களும் எமது சமூகத்தின் விஷ ஜந்துக்களாக மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

(எழுத்து தொடரும்)

அதிரடியாக தூக்கப்பட்டார் பிரபாகன்!

-ஆச்சர்யா அபிநயவாசன்-

வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியராக கடமையாற்றிவந்த இரத்தினசபாபதி பிரபாகன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வீரகேசரி வார வெளியீடு தொடர்ச்சியாக சிறந்த முறையில் வெளிவரவில்லை. அதாவது செய்தியாக்கத்தில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது.

புதியன உட்புகுத்தப்படாமை, செய்தியாளர்களுக்கான தட்டுப்பாடு, இணையவழி கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றமை, சமகால அரசியல் பகுதியில் ஏற்பட்டு வரும் தொய்வு, சமூக வலைத்தளம் மற்றும் நவீன ஊடகங்கள் மீதான பார்வை இன்மை, திறமையான பக்கவடிவமைப்பாளர்களுக்கு இடம் கொடுக்காமை போன்ற காரணங்களும் இன்னும் பலவும் உண்டு.

இந்த நிலையில் சமீபத்திய நடவடிக்கைகளின் பிரகாரம் உரிய முறையில் பணிகளைச் செய்யத் தவறியமையை சுட்டிக்காட்டி பிரபாகன் பதவி நீக்கம் இடம்பெற்றிருக்கிறது.

நிர்வாகத்தின் அதிரடித் தீர்மானமாக இந்த விடயம் கவனிக்கப்படுகின்ற போதும் கடந்த ஈராண்டு திட்டங்களின் பெறுபேறாகவே இதனைக் கருதமுடியும்.

ஒருசிலர் கர்மா என்கிறார்கள், இன்னும் சிலர் பாவம் என்கிறார்கள், மேலும் சிலருக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

இது தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடல் ஏக்கலையில் நேற்று நடைபெற்றது.

பிரபாகனின் பணிநீக்கம், உள்ளக – வெளியக காரணங்கள் உள்ளிட்ட புதுத் தகவல்கள் பலவற்றுடன் மீண்டும் விரைவில் சந்திப்போம்.

நன்றி.