Saturday, July 2, 2016

விரைவில் வெளிவரவுள்ள பதிவுகள்!



  • பொத்தி வச்ச ஒரு வட்ட நிலா!
    எழுதுபவர் மீரா கோகுலகாந்தன்
  • அமுனுகமவின் மாதாந்த வருமானம் என்ன?
    எழுதுபவர் சுமன் தங்கராஜா
  • ஒரு சிங்களப் பேப்பரின் சுயசரிதை தமிழாக்கம் மொஹமட் சுபைர்தீன்
  • இலட்சத்தை விழுங்கிய அலக்ஸான்டர்
    எழுதுபவர் இ.திருச்சக்கரன்

  • கனவு தேசத்தில் இனியொரு வீரகேசரி
    எழுதுபவர் சோ. இராஜராஜன்


லட்டு திண்ணும் கண்ணன்!


(ஏ.ஸ்ரீராம்)

வீரகேசரி நிறுவனத்துக்கு தொலைபேசி இணைப்புகளை பெறும் பொறுப்பு தயாளனுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தொலைபேசி இணைப்பு, இன்டர்நெட்  இணைப்பு, டொங்கல் போன்றவற்றை கனகச்சிதமாக பெற்றுக்கொள்ளும் அவரது மகா இராஜதந்திரம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வீரகேசரிக்கு லங்காபெல் இணைப்பு இருந்தது. 0115322 என்று ஆரம்பமாகும். அதன்பின்னர் டயலொக் இற்கு மாற்றப்பட்டது. அது தற்போதுள்ள 0117322 என ஆரம்பிக்கும் இலக்கமாகும்.

இந்த இணைப்பை பெறுவதற்கு தயாளனுக்கு ஒரு ரவுட்டரும் இரண்டு டொங்கல்களும் இலவசமாக டயலொக் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

இந்த விடயம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கோ குமார் நடேசனுக்கோ தெரியாது.

ஆனால் இந்தக் கொள்ளைச் சம்பவம் எப்படியும் செந்தில்நாதனுக்கு தெரியவரும் என்பதை தயாளன் நன்கு அறிந்துவைத்திருந்தார்.

ஏனென்றால் டயலொக்கிலிருந்து வீரகேசரிக்கு வரும் தொடர்பாடல் அதிகாரி தயாளனுக்கு நெருக்கமானவர். அதேபோல செந்தில்நாதனுக்கும் தொடர்பு உண்டு.

இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த தயாளன் தனது மூளையை கசக்கி ஐடியாவை பிறப்பித்தார். அது என்னவென்றால் இந்த கொள்ளையடி வேலையில் செந்தில் நாதனையும் இணைத்துக்கொள்வதுதான் அது.

இலட்சக்கணக்கில் டயலொக் இற்கு பணம் கொடுக்கப்போகிறோம் எங்களையும் கவனியுங்கள். எமக்கு இரண்டு போன்கள் வேண்டும் என தொடர்பாடல் அதிகாரிக்கு சொன்னார் தயாளன்.

அதன்பிரகாரம் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்பட்டன. அதில் ஒன்றை தயாளனும் மற்றையதை செந்தில்நாதனும் உபயோகித்தார்கள்.

அதேபோன்ற கையடக்கத் தொலைபேசி வேண்டும் என வாசுதேவனும் கேட்டிருக்கிறார். அவருக்கு டிஸ்கவுன்டில் வாங்கிக்கொடுத்தார் தயாளன்.

அதற்குப் பிறகு எட்டிசலாட் டொங்கல் பெற்றுக்கொள்ளும்போதும் உதிரியாக இரண்டு டொங்கல்கள் தயாளனுக்கு வழங்கப்பட்டன வழங்கப்பட்டன.

எட்டிசலாட்டை நிறுத்திவிட்டு டயலொக் டொங்கல் வாங்குவதற்கு முடிவுசெய்தார் தயாளன். அதிலும் அவருக்கு சன்மானமாகக் கிடைத்தது ஒரு என்றொயிட் கையடக்கத் தொலைபேசி.

இந்த விவகாரம் யாருக்கும் தெரியாது. 

ஏக்கலை புரொஜெக்டில் வீரகேசரி பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் தயாளனுக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் கிடைத்தது.

ஏனென்றால் ஏக்கலை புரொஜெக்ட்டுக்கான இணைப்புகளை பெறும் பொறுப்பும் வழங்கப்பட்டது. இனி சொல்லவா வேண்டும். கொடுக்கிற சாமி கூரை வழியாக கொட்டியது.

அந்த புரொஜெக்ட்டில் தயாளனின் டீல் என்னவென்று நமக்குத் தெரியாது. தெரியாத விடயத்தை இல்லாததையும் பொல்லாததையும் கூறி நாம் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஏக்கலை விவகாரத்தில் அம்மாவும் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிய புதையலாகத்தான் இருக்கும் என நம்புகிறோம்.

கொள்ளையர்கள் ஒவ்வொருவரிடமும் கடவுளே வந்து கேட்டிருக்கிறார் போல – "கண்ணா லட்டு திண்ண ஆசையா?"


Wednesday, June 29, 2016

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

(இ. திருச்சக்கரன்)

தன் வாயைக் கொண்டு எல்லாரையும் ஆட்டிப்படைத்த அமுனுகமவின் வாய் இப்போது அடங்கவிட்டது.
ஐயோ….அவங்களோட மூஞ்சியையே பார்க்க முடியல்ல.

இப்படி எத்தனைபேரின் வாழ்க்கையை சீரழித்திருப்பீர்கள். உங்களைப் பற்றிய உண்மையை நாம் புட்டுப்புட்டு வைத்தவுடன் (இன்னும் இருக்கிறது) எப்படி நிலைமை மாறிப்போனது?

யார் இதுவென்று கண்டுபிடியுங்கள் என அமுனுகம ஒருசில நம்பிக்கையான ஆட்களை நியமித்திருக்கிறார். அவர்கள் எமக்கும் நம்பிக்கையானவர்கள்தான் அம்மையாரே!

நாம் எமது பதிவுகளை ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழிந்திருக்கின்றன. இதுவரை 15554 பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல, பயத்தில் பலர் திருந்தியிருக்கிறார்கள். சிலருக்கு கிலிகொள்ளவைத்திருக்கிறது சில பதிவுகள்.

இத்தனை சம்பவங்கள் நடந்தும் எமக்கு ஒன்றுமே தெரியாதே என அங்கலாய்க்கும் நண்பர்களும் இருக்கிறார்கள்.

அமுனுகம குறித்த புதியதொரு தகவல் எமக்கு மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்றிருக்கிறது. நாம் எந்தத் தகவலையும் உறுதி செய்யாமல் பதிவேற்றுவது கிடையாது. அந்த வகையில் எமது குழுவினர் இதுதொடர்பில் ஆராய்கிறார்கள்.

ஏக்கலை புரொஜெக்ட்டுக்கு சாமான்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான தகவலே எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.

அது உண்மையாயின் இனி பலரது பொறுப்புகள் ஆட்டம் காணப்போகிறது தோழர்களே.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆட்டம் முடியும் நேரமடா!

விரைவில் சந்திப்போம்.

(வீரகேசரிக்கு தொலைபேசி இணைப்புகளை பெற்றுக்கொடுத்து அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பெறுமதியான போன்களை இலவசமாக பெற்றுக்கொண்ட கதையை நாளை இரவு எதிர்பாருங்கள்)

Tuesday, June 28, 2016

ஏக்கலையில் நடந்த சல்லாபம்!


( அ.கொம்பேறி மூக்கன்)

க்கலை புரொஜெக்ட்டுக்காக வீரகேசரியின் இடைநிலை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டார். தயாளனின் வண்டவாளங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டுள்ள அதிகாரி அவர்.

அவருக்குரிய பணிகள் அனைத்தும் ஏக்கலையிலேயே அமைக்கப்பட்டன. குமார் நடேசனின் நேரடி பணிப்புரைக்கு அமைய அவர் அங்கு முழுநேரப் பணியாளராக கடமையாற்றினார்.
ஏக்கலையில் கெமரா பொருத்துதல், ஐ.டி.சம்பந்தமான தொழில்நுட்பங்களை பார்த்தல் என்பனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த பணிகள்.

நாம் சொல்லப்போகும் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டன.

அந்த அதிகாரியின் பெயரை ஏ என்று வைத்துக்கொள்வோம்( சாலப்பொருத்தமாகத்தான் இருக்கிறது).

ஏ அங்கு பணியாற்றத்தொடங்கியபோது பெரும்பாலும் தனிமையிலேயே கடமைகளை செய்தார். முதலாவது மாடியிலுள்ள தனியறைதான் அவருடையது. அங்கு வேறு யாரும் வருவது மிக மிகக் குறைவு.

ஏக்கலையில் தனிமையாக இருந்த ஏ அதிகமான நேரத்தை நீலப்படம் பார்ப்பதில் தான் கழித்தார்.

கேட்பார் யாருமில்லை, பார்ப்பாரும் யாருமில்லை என்பதுதான் அவருக்கு அங்கு கிடைத்த பணிச் சன்மானம்.

அப்படி நீலப்படங்களை பார்த்து பார்த்து அவருக்குள் ஏதோவொரு தூண்டுதல் உருவாகியது.

அதன் காரணமாக அவர் என்ன செய்தார் தெரியுமா?
ஏக்கலை புரொஜெக்டில் இன்ஜினியராகவும் தொடர்பாடலுக்கு பொறுப்பாகவும் இருந்த ஒரு பெண்ணை வலைத்துப்போட்டார்.

அந்தப் பெண்ணும் ஏ சொல்லும் ஏ ஜோக்குகளுக்கு மயங்கி இசைந்துகொடுத்தார். சாதாரண எஸ்.எம்.எஸ். இல் ஆரம்பித்தது அவர்களுடைய உறவு.

அது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறும்போது ஏ இன் வேலை செய்யும் நேரமும் அதிகமானது.
காலையில் 8 மணிக்கு வரும் ஏ இரவு 8 மணியைத் தாண்டியும் அங்கு பணிபுரியத் தொடங்கினார். செந்திலுக்கும் குமாருக்கும் அப்படியொரு சந்தோஷம்.

இப்படியொரு அர்ப்பணிப்பான பணியாளர் இருக்கிறாரே என களிப்படைந்தனர். ஆனால் ஏ என்ன செய்தார்? கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய காதல் காமம் வரை நகர்ந்தது.

முதலாம் மாடியிலுள்ள தனது அறைக்கு அழைத்து உரசல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது இருந்தாலும் காலப்போக்கில் அனைத்து ஊழியர்களும் இதை அறிந்துகொண்டார்கள்.

அந்தப் பெண்ணை முச்சக்கர வண்டியில் அழைத்துக்கொண்டு அலுவலக நேரத்தில் வெளியில் செல்லும் அளவுக்கு அவர்களுடைய உறவு விரிந்தது.

இது பற்றி ஏக்கலையில் சலசலப்பாக கதை அடிபட்டது. ஆனாலும் ஏ தனது காதல் பணியை நிறுத்தியதாக இல்லை. அவர் தனது அறையில் அந்தப் பெண்ணுக்கு உதட்டோடு உதடுவைத்து முத்தம் கொடுத்ததை வேறொரு ஊழியர் தனது கெமரா போனில் படம் எடுத்துக்கொண்டார்.

அது வைரலாக பரவத்தொடங்கியபோதுதான் அங்கு பிரச்சினை உருவானது.

ஏ எப்படியோ தனது தொழில் இராஜதந்திரத்தை பயன்படுத்தி அந்த ஊழியரை (அவர் கட்டட நிர்மாணப் பணியாளர்) இடைநிறுத்திவிட்டார்.

ஆனால் அந்த ஊழியர் தனது நிறுவனத்தக்கு இந்த விவகாரத்தை அறிவித்துவிட்டார். அதன்பின்னர் அந்தப் பெண் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டார்.

இந்த விடயம் வீரகேசரியில் அதிகமான ஊழியர்களுக்கு தெரியும். எனினும் கென்டீனிலும் பாரிலும் கதைத்துவிட்டு அப்படியே விட்டு விடுகின்றனர்.

ராமா ராமா காயை காத்திருந்து பழுக்கவைப்பதை விட பழமே  கிடைத்தால் எப்படியிருக்கும். அதுவும் பாலில் நழுவி விழுந்துவிட்டால்!

நீ சந்தோஷமாய் இரு ராமா!

Sunday, June 26, 2016

யார் உண்மையான அர்ப்பணிப்பாளர்கள்?


(சோ. இராஜராஜன்)

நாம் எமது தளத்தில் தரும் தகவல்கள் விபரங்கள் அனைத்துமே உண்மையானவை என்பது வீரகேசரியில் உள்ள அனைவருக்கும் தெரியும். பொய்கூறி வதந்திகளை பரப்பி எமக்கு இலாபம் தேட வேண்டிய அவசியம் இல்லை.

கள்ளத்தனம் செய்த பலருக்கு இப்போதே அடிவயிறு கலக்கத் தொடங்கிவிட்டது. நேர்மையாக இருந்தால் எதற்கு பயப்பட வேண்டும்?
எமக்கு நாளுக்கு நாள் ஆதரவு பல்கிப் பெருகி வருகிறது. 

எமது குழுவை தேடும் தீவிரமான பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் பணியில் எமது குழுவைச் சேர்ந்தோரும் இயங்குகிறார்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

இன்னும் சில தகவல்களை வெளியிட்டவுடன் நாம் யார் என்பதை உலகுக்கு அம்பலப்படுத்துவோம். அப்போது எமது குழுவைச் சேர்ந்த எவரும் வீரகேசரியில் இருக்க மாட்டார்கள்.

ஏக்கலை புரொஜெக்ட் பிசுபிசுத்துப்போன சோகத்தில் உள்ள முகாமைத்துவமும் இன்னும் கொஞ்சம் கொள்ளையடித்திருக்கலாமே என ஏங்கித் தவிக்கும் கொள்ளையர்கள் கூட்டமும் எமது எழுத்து வல்லமையை எண்ணி திகைத்துப் போய் நிற்பதை நாம் நேரடியாக காண்கிறோம்.

இந்தளவுக்கு சொல்லாடலை எங்கே காணமுடியும் என எம்மிடமே பலர் கேள்வி கேட்கிறார்கள்.

இருக்கட்டும்.

இங்கே யார் அர்ப்பணிப்பாளார்கள்?

செய்தியை படிப்பதற்காகவே பத்திரிகை வாங்குகிறார்கள். அதற்காக அற்ப சம்பளத்தில் ஊடகவியலாளர்கள் தொழில்புரிகிறார்கள். ஆனால் இங்கே யார் இலாபடைகிறார்கள்?
மார்க்கட்டிங் இற்கு வரும் ஸ்கூல் லீவர் கூட 15 ஆயிரம் சம்பளத்துடன் 10 வீத கொமிஷன் பேஸிஸ் அடிப்படையில் உள்வாக்கப்படுகிறார்.
ஆனால் சமூகத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரைப் பணயம் வைத்து தொழில்புரியும் ஊடகவியலாளர்களுக்கு கிடைப்பதோ வெறும் 12 ஆயிரம்.
அதிலும் ஆமகுஞ்சியின் கள்ளப் பெண்ஜாதி சந்திரனுக்கு கால்பங்கு போய்விடும்.
நாம் நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல வீரகேசரியின் எந்தவொரு நிகழ்வுக்கும் சொப்னா அமுனுகம வந்ததில்லை. ஆமகுஞ்சியும் மிஞ்சிப்போனால் நிகழ்வுக்கு வந்து 1 மணிநேரம் கூட இருந்ததில்லை.
இவர்கள் சிங்களவர்கள். எமது சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாதவர்கள்.



எமது நிறுவனத்தில் தொழில்புரியும் சிங்களவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தையும் தமிழர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதிலேயே எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

ஆமகுஞ்சிக்கு சம்பளத்தில் பேரம் பேசத் தெரியுமே தவிர பத்திரிகை துறை சம்பந்தமாகவோ நவீன தொழில்நுட்பம் சம்பந்தமாகவோ எதுவும் தெரியாது.
ஊர்மேய்பவர்களை அவிழ்த்துவிட்டு கூத்துப் பார்க்கும் சொப்னா அமுனுகமவை போன்ற ஜென்மங்கள் வேறு எவரும் கிடையாது.

எமது நிறுவனத்தில் ஒரு சதம் கூட பணம் எடுக்கவில்லை என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் சத்தியம் செய்யச் சொல்லுங்கள். அடுத்தநாளே சொப்னாவின் நாக்கு தீயில் வெந்துபோகும்.

இப்படிப்பட்டவர்களைத்தான் வீரகேசரி நிறுவனம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

ஆணிபிடுங்கவும் தனக்கு பிடிக்காதவர்களை தூக்கியெறியவும் சொப்னாவின் தாளத்துக்கு ஆட்;டம் போடுபவனுமான சூதொடச்சானை சீனியர் மெனேஜர் போஸ்ட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சொப்னா பட்ட பிரயத்தனத்துக்கு அளவேயில்லை.

அதுபற்றி போர்ட் ரூமில் பெரும் விவாதமே நடந்தது. ஆனால் சொப்னா கடைசிவரை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்கான காரணத்தையும் நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

அழகிய கிராமத்தை ஒருசில கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்வது போல இந்த நிறுவனத்தை சீரழிக்க ஒருசில கொம்புக் கரடிகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.
அவர்களின் உண்மையான முகத்திரையை இங்கே வெளிச்சமிட்டுக் காட்டுவதே எமது நோக்கம்.

புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறோம். எமக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி.

(அடுத்த பதிவிலிருந்து நாம் வைத்த சுட்டுப் பெயர்களைக் கொண்டு யாரும் அழைக்கப்பட மாட்டார்கள். எமது தூய்மையான எண்ணத்துக்கு அவை களங்கம் விளைவிக்கும் என எமது ஆலோசக பெருந்தகைகள் கூறியதற்கு இணங்க முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அறிவிக்கிறோம்)

சந்திப்போம்.