Saturday, April 22, 2017

மீண்டும் வருகிறார் தேவராஜா!

(ஏ.ஆர்.விஸ்வநாதன்)

காலம் சுழலும் என்பார்கள். இங்கே கெட்டவர்களுக்கு ஒரு காலம் இருந்து நல்லவர்கள் மிதிக்கப்படுவதும் பின் நல்லவர்கள் மீண்டு வருவதும் நடைமுறை.

அதனை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம்.

இப்போது வீரகேசரி வார வெளியீட்டை நடத்துவதற்கு திறமையான ஆசிரியர் ஒருவர் இல்லாமல் திண்டாடுகிறது நிர்வாகம்.

தரமான எந்த செய்திகளையும் வார இதழில் காணக்கிடைப்பதில்லை. தமிழ் வின் ஐயும் இந்திய இணையத்தளங்களையும் அவ்வாறே பிரதியிட்டு பத்திரிகை செய்தியாக வெளியிடுகிறார்கள்.

இது தொடர்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. முறைப்பாடுகளும் நிர்வாகத்துக்கு பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் முன்னாள் ஆசிரியர் தேவராஜை மீண்டும் அழைப்பது தொடர்பில் அரசல்புரசலாக மேல்மட்டத்தில் பேசப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய பணிப்பாளர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவும் இல்லை, மறுப்பு தெரிவிக்கவும் இல்லை.


இது தொடர்பில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் இருந்தாலும் தேவராஜின் நிர்வாகத் திறமையும் புதிய செய்திகளை வெளியிடும் தனித்தன்மையும் தற்போதுள்ளவருக்கு கிடையாது என்பது பொதுவான அபிப்ராயம்.

தேவராஜ் பிரதம ஆசிரியராக இருந்தபோது புலனாய்வு செய்திகள் தொடர்பில் இந்திய றோ அமைப்பு பல தடவைகள் மேலிடத்தை மறைமுகமாக எச்சரித்திருந்தது. இருந்தபோதும் சில செய்திகளை வெளிப்படையாகவே தேவராஜ் வெளியிட்டு வந்தார்.

எனினும் தற்போது இந்தியா தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என உயர்ஸ்தானிகரகம் அண்மையில் பணிப்பாளருக்கு நேரடியாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பார்ப்போம்…காலம் மாறும்…காட்சிகள் மாறும் கண்ட கோலங்களும் மாறும்!

நன்றி.