Sunday, July 24, 2016

பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஏக்கலை!


(ஆசிரியர் - இலங்கை இதழியல்)

வீரகேசரியின் புதிய கட்டிடம் அமைந்துள்ள ஏக்கலை பகுதி பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஏக்கலையில் சிங்களவர்கள் செறிந்து வாழும் குக்கிராமத்திலேயே அந்த கட்டிடம் அமைந்திருக்கிறது. அலுவலகத்திலிருந்து இரு புறங்களிலும் சுமார் 100 மீற்றர் தூரத்தில் நாலைந்து விபச்சார விடுதிகளும் இயங்கி வருகின்றன.

தற்போது அங்கு தொழில்புரியும் நம்மவர்களின் அதிகமான நேரம் அங்குதான் கழிகின்றது.

ஏக்கலையிலிருந்து வீரகேசரி அலுவலகத்துக்கு நடந்து செல்வதானால் 45 நிமிடங்கள். முச்சக்கர வண்டியில் செல்வதானால் 15 நிமிடங்கள் செலவாகும்.

ஆனால் அங்கு முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் சாதாரண பெட்டிக்கடை வைத்திருப்போர் வரை அனைவரும் சிங்களவர்கள்.

அவர்களுக்கு தமிழர்கள் மீது கடுமையான வெறுப்பு காணப்படுகிறது. குறிப்பாக தமிழ் நிறுவனம் தமது பகுதியில் காலடி எடுத்து வைப்பதே அவர்களுக்கு பெரும் பிரச்சினைதான்.

அதனால் தினமும் அங்கு கல்லெறிந்து காசு கேட்டு பிரச்சினைபடுகிறார்கள். நேற்றுமுன்தினம் கூட ஒரு காடையர் கூட்டம் அங்கு வந்து பாதுகாப்பு ஊழியர்களை மிரட்டியிருக்கிறது.



இப்படியிருக்கையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்பதில் எவ்வித நிச்சயமும் இல்லை. எப்படியும் அங்கு செல்லும் பெண்களில் பலருக்கு மிக மோசமான அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வீரகேசரிக்கு எதிரான பதிவு இது. பெண்கள் யாரும் இதனை ஒரு பொருட்டாக கொள்ளத் தேவையில்லை என முகாமைத்துவம் கூறலாம். ஆனால் பெண்களாகிய நீங்கள் ஒருநாளைக்கு அந்த இடத்துக்கு பஸ்ஸில் சென்று வாருங்கள். உண்மை உங்களுக்குப் புரியும்.

பட்டப்பகலில் தனியாக அந்தப்பாதையில் நடந்துபாருங்கள்.

எத்தனைபேரின் கேவலமான பேச்சுகள் காதில் விழும் என்று?

பொட்டு வைத்துக்கொண்டு அங்கு செல்ல முடியாது. உங்களை அப்படியே அள்ளிக்கொண்டு போய்விடும் அளவுக்கு மிக மோசமான நபர்கள் வாழும் பகுதி அது.

இந்த விடயத்தை யாரும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். உங்கள் குடும்பம், பிள்ளைகள், தாய் தந்தையர்கள், கணவர் குறித்து ஆழமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

ஆதலால் கவனமாக இருங்கள். உங்களுக்கு எதுவும் நடந்தபிறகு வீரகேசரி எதையும் கண்டுகொள்ளாது என்பது வெளிப்படையான உண்மை. அது நாம் அனுபவ ரீதியாக கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம்.

நன்றி.