Thursday, June 23, 2016

Exclusive: வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட இரு பெண்கள் செய்தது என்ன?

(ஆசிரியர் - இலங்கை இதழியல்)

நாம் இதுபற்றி சுருக்கமாக எழுதியிருந்தோம். ஆனாலும் எமக்கு மிக நீண்ட விளக்கமான மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது. அதனை எந்தவித செம்மைப்படுத்தலுக்கும் உட்படுத்தாமல் அவ்வாறே இங்கு தருகிறோம்.
நன்றி.
-ஆசிரியர்-
---------------------------------------------------------------------------------------

 வணக்கம்
மிகவும் வருத்தத்துடன் இம்மடலை எழுதுகின்றேன்.ஏனேனில் நாம் பணிபுரியும் இடத்தினை பற்றி குறைகூறுவது மனதிற்கு நெருடலாக இருந்தாலும், சில விடயங்களை நேரடியாக முகாமைத்துவத்திற்கு கூற முடியாத நிலைமை.இருப்பினும் இதனை நிச்சியம் வீரகேசரி முகாமைத்துவம் பார்வையிடும் என்ற நம்பிக்கையில் வீரகேரியில் நீண்டகாலம் பணிபுரியும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஊடகவிலாளர்கள் சார்பில் எனது உள்ளக்குமுறலை உங்கள் முன் வைக்கின்றேன். 

உங்களது பதிவில் நீங்கள் குறிப்பிட்டது போன்று வீரகேசரியின் வெள்ளைத்துரைக்கு காக்கா பிடிப்பர்கள் மட்டுமே அங்கு சலுகைகளை அனுபிக்க முடியும் என்பது இப்பதிவினை படித்த பின்னர் இன்னும் தெளிவாக புரியும்.
முகாமைத்துவமே இதனை படித்து விட்டாவது உங்கள் திறமையான நீண்டகாலம் பணிபுரியும் ஊழியர்களிடையே நடுநிலைமையினை காப்பார்கள் என நம்புகின்றேன்.
வீரகேசரியில் ஒவ்வொரு வருடமும் வேன் இப்ரா என்ற கருத்தரங்கிற்கு பணியாளர்களை அனுப்புவது வழக்கம்.ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இந்தியாவில் இக்கருத்தரங்கு நடைபெறும்.பொதுவாக இதழியல் தொடர்பான விடயங்களும் ,பத்திரிகைத்துறையின் புதிய விடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் இங்கு ஆராயப்படும்.

எனவே பொதுவாக இதற்காக ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஊடகவியலாளர்கள் / வேறு பிரிவின் பொருத்தமான ஊழியர்கள் இக்கருத்தரங்கிற்கு தெரிவு செய்து அனுப்பிவைப்பார்கள். பொதுவாக இக்கருத்தரங்கு
02 அல்லது 03 நாட்களே இடம்பெறும். இதற்காக செல்லும் ஊழியர்களுக்கு கருத்தரங்கிற்கு மேலதிகமாக 01 நாள் செல்லும் ஊரை சுற்றிப்பார்த்து விட்டு வரும் வகையில் தான் முகாமைத்துவம் போகும் மற்றும் வருவதற்காகன விமான பயணச்சீட்டுக்களை வழங்கும்.
ஆனால் கடந்த 2015ம் ஆண்டு நடந்ததோ வேறு. 2015 வேன் இப்ரா கருத்தரங்கு சிங்கப்பூரில் இடம்பெற்றது. இதற்காக இரு பெண்கள்  (அங்கவையும் சங்கவையும்) முகாமைத்துவ இயக்குனரின் சொந்த விருப்பின் பெயரில் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டனர். வீரகேசரியில் எத்தனையோ ஊடகவியலாளர்கள், அனுப்பிவைக்கப்பட்ட இவ்விருவரை விட இதழியல் துறையில் அனுபவமும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்களாக இருக்கின்றார்கள்.

இருப்பினும் ஒரு தலைபட்சமாக தனக்கு நெருக்கமான இவ்விருவரையும் அனுப்பிவைத்தது ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்களது ஆதங்கத்தினையும் உள்ளக்குமறல்களையும் யாருக்கும் தெரியப்படுத்தினால் அடுத்த வெட்டு நமக்குத்தான் என்பதினால் யாரும் அது தொடர்பாக முகாமைத்துவத்திடம் கேள்வி எழுப்பவிலை.அதிலும் அனுப்பிவைக்கப்பட்ட இருவரில் ஒருவர் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியின் காரியதார்சியாவார்.
(Secretary) இவருக்கும் இக்கருத்தரங்கிற்கும் எவ்வித தொடர்புமில்லை. மற்றையயவர் வீரகேசரி FD அங்கில பத்திரிகையில் ஊடகவியலாளராக பணிபுரிபவர். இவர் ஒரளவிற்கு இக்கருத்தரங்கிற்கு தகுதியானர் என்றாலும் அவர் வீரகேசரிக்கு புதியவர். அவரை விட பல மடங்கு அனுபவம் கொண்ட நீண்டகாலம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் (பெண்கள் உட்பட) வீரகேசரியில் இருக்கின்றார்கள்.
இவ்வட்டவணை பொதுவாக இக்கருத்தரங்கிற்காக அனுப்பிவைக்கப்படுவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் 2015 ஆம் ஆண்டு முகாமைத்துவ இயக்குனரியால் அனுப்பிவைக்கப்பட்டவர்களுக்கு வழங்க்ப்பட்ட சலுகைகளையும் காட்டுகின்றது.
வழக்கமாக சென்றோருக்கு 
·         பொதுவாக ஒருவர் தனிப்பட்ட செலவுக்காக 15000 வரை வழங்கப்பட்டது
·         02/03 நாள் கருத்தரங்கு தவிர்த்து 01 நாள் மட்டுமே அவர்கள் சென்ற ஊரை நுற்றிப்பார்க்க அனுமதி வழஙக்ப்பட்டது
·         தங்குவதற்காக சாதாரண ஹோட்டலே வழங்கப்பட்டது(போய் வந்த சில அன்பர்கள் சாதாரண வாழ்க்கைக்கு கூட பொருத்தமில்லாத ஒரு இடத்தில் தங்களுக்கு தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டதாக கூறினர்)
The most favorable girls in ENCL



2015ம் ஆண்டு சென்றோருக்கு
·         ஒருவரின் தனிப்பட்ட செலவுக்காக 50000 -75000 வரை வழங்கப்பட்டுள்ளது
·         03 நாள் கருத்தரங்கிற்கு மேலதிகமாக 05 நாள் சிங்கப்பூரினை சுற்றிப்பார்க்க விடுமுறையும் நிதி வசதிகளும் வழங்கப்பட்டது
·         05 நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சலுகைகளுடன் இது வரை எந்தவொரு பாடுபட்டு உழைக்கும் வீரகேசரியில் நீண்டகாலம் பணிபுரியும் ஊழியரும் எங்கும் அனுப்பிவைக்கப்பட்டதில்லை.பொதுவாக இவ்விருவருக்கும் அதிக சலுகைகளை கொடுத்து அனுப்பிவைத்ததிற்கான காணங்கள் சில:
01.இவ்விருவரும் முகாமைத்துவ இயக்குனருக்கு நெருக்கமான பெண்கள்(பொதுவாக வீரகேசரியில் ஆண் ஊழியர்களுக்கு (சில பெண் ஊழியர்களுக்கும்தான்) முகாமைத்துவம் பெரியளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிலும் பெரிய தலை நிச்சியமாக பசங்களை கண்டுகொள்ளவே மாட்டர்.அத்துடன் இருவருக்கும் முகாமைத்துவ இயக்குனரே அமேரிக்காவில் இருந்து புதிய மடிக்கனணிகனை அவரது சொந்த செலவில் வாங்கி வழங்கியிருப்பதாக கூறுகின்றார்கள்-இங்கு பணிபுரியும் பலருக்கு சாதாரண கனணியே இல்லை என்பது உள்ளிருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை)
02.இதில் காரியதர்சியாக பணிபுரிபவர் முகாமைத்துவ இயக்குவரின் அலுவலகம் தவிர்ந்த அவரது பல்வேறு வேலைகளை தானே முன்னின்று செய்பவர்.மற்றையவரும் அதே போல்….. (அண்மையில் புதிதாக முகாமைத்துவ இயக்குனரின் பணிப்புரையின் பெயரில் அவரது சொந்த புத்தகம் ஒன்றிற்காக பாடுபட்டு உழைப்பதாக தகவல்)
03.இருவரும் பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்கள்.

இதன் மூலம் நான் ஆரம்பத்தில் கூறியது எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை தாங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்.இருவரும் கருத்தரங்கிற்கு விமானம் ஏறும் வரை இரகசியமாக வைக்கப்பட்டிருந்த விடயம் பேஸ் புக்கின் மூலம் அனைவரும் தெரிந்து விட்டது.அப்போதிருந்தே பலரும் இது தொடர்பாக முனுமுனுக்க ஆரம்பித்து விட்டர்.அத்துடன் கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் அவர்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதியினைக்கொண்டு கூத்தடித்த படங்களை பேஸ் புக்கில் பதிவேற்றிய பி;ன்னர் பலரும் இது முற்றிலும் நியாயமற்ற செயல் என அங்கலாய்த்தனர்.சிலர் பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கும் முறையிட்டதாக தகவல்.
கருத்தரங்கிற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற ஒருவரையும் ஊடகத்துறையில் எவ்வித முன் அனுபவம் இல்லாத ஒருவரையும் தனது சொந்த விருப்பின் அடிப்படையில் இதுவரையில் எவருக்கும் வழங்கப்படாத சலுகைகளை வழங்கி பாடுபட்டு உழைக்கும் ஊழியர்களின் உழைக்கும் பணத்தினை பயன்படுத்தி ஒருதலைப்பட்டமான முடிவுடன் அனுப்பி வைத்தது எவ்விததிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று.
இது வரையில் இக்கருத்தரங்கிற்கு சென்று வந்தவர்களை கேட்டால் இவர்களுக்கும் மற்றையவர்களும் வழங்கப்பட்ட சலுகைகளின் வேறுபாட்டினை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் இதனைபற்றி முகாமைத்துவத்திடம் நாசூக்காக கேட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட பதில். இதில் ஒருவர் இதழியல் பட்டதாரி .அவர் இக்கருத்தரங்கிற்கு பொருத்தமானவர் தான்.

ஒரு பெண்னை தனியாக அனுப்ப முடியாது என்ற காரணத்தினாலேயே அவருக்கு துணையாக காரியதரிசியான பெண்னை அனுப்பி வைத்தோம் என்றார்களாம். அப்படியெனின் இவர் மட்டுமா வீரகேசரியின் பெண் ஊழியர்.இவரைவிட இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்த பல பெண்கள் ஆசியர் பீடத்தில் கடமையாற்றுகின்றனர்.

ஏன் அவர்களை அனுப்பவில்லை. அவர்களில் யாராவது ஒருவரை அனுப்பி வைத்திருந்தால் நிச்சியம் எதனையாவது கற்றுக்கொண்டிருப்பார். நிறுவனத்திற்கு உபயோகமாக இருந்திருக்கும். இவ்வாறான பல்வேறு முரண்பாடான நியாயங்கள் அவரை அனுப்பியதிற்கு முகாமைத்துவத்தினால் காரணம் கூறப்பட்டது.

அத்துடன் குறிப்பிட்ட காரியதர்சிக்கு இக்கருத்தரங்கு சுற்றுலாவாக மட்டுமே இருந்தது அவர் சென்று வந்த பின்னர் அவர் அவரது சக ஊழியர்களிடம் பகிர்ந்த சில விடயங்கள் அலுவலகம் முழுவதும் பரவி நம் காதுகளுக்கும் எட்டியது அப்போது.அவரும் என்ன செய்ய முடியும் தனக்கு சம்மந்தமே இல்லாத விடயத்தினை அவரும் எவ்வளவு நேரம் தான் தூங்காமல் கேட்டுகொண்டிருப்பார்.
வீரகேசரியில் முகாமைத்துவ இயக்குனருக்கு அல்லது பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றது என்பதற்கு இதனைவிட பெரிய உதாரணம் ஒன்று தேவையில்லை.

இங்கு அவர்களை விட பாடுபட்டு உழைக்கும் கடமை தவறாத ஊழியர்கள் பலர் இருக்கின்றனர்.அவர்களைப்பற்றியோ அல்லது அவர்களது பெயர்களை கூட முகாமைத்துவ இயக்குனர் அறிய வாய்ப்பில்லை.ஏனேனில் அவர் தனக்கு நெருக்கமானவர்களைத் தவிர வேறு எவரையும் சந்திப்பதுமில்லை.பெரிய தலைகள் திறமையான ஊழியர்கள் தொடர்பான அவருக்கு எதுவும் கூறுவதுமில்லை. மனிதவளப்பிரிவு ஊழியர்கள் தொடர்பாக எவ்வித கரிசனையே ஆய்வுகளையோ மேற்கொள்வதில்லை.இதனாலேயே பல்வேறு திறமையான ஊழியர்கள் இந்நிறுவத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.        
மொத்தத்தில் முகாமைத்துவ இயக்குனருக்கு வால் பிடிப்பவர்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளும். பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே மேலதிக சலுகைகளுடன் சுற்றுலா செல்ல முடியும்.எதிர்த்துப் பேசினால் பிரதம செயற்பாட்டு அதிகாரி தனது பலத்தை பயன்படுத்தி எப்படியெல்லாம் பேசியவரை வெட்ட முடியுமோ அப்படியெல்லாம் செய்வார் தனது கைக்கூலிகளை பயன்படுத்தி. மேலும் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கும் அழுத்தத்தினை சிரித்துக்கொண்டே செய்து வீடுவார்.
மொத்தத்தில் வீரகேசரியில் உழைக்(இருக்)க…..
01.ஆங்கிலம் பேச வேண்டும்
02.வெள்ளையாகவும் ,அழகாகாவும் இருக்க வேண்டும்.(ஆண்,பெண் பேதமில்லை).பெண்ணாக இருந்தால் இன்னும் சிறப்பு.
03.செல்வந்த வீட்டு பிள்ளையாகவும் கொழும்பை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் (அப்போது தான் உங்களை முகாமைத்துவத்திலிருக்கும் சிலர் உங்களுக்கு சாரதியாக செயற்பட்டு வீட்டிலேயே கொண்டு போய் இறக்கி விடுவார்கள்-போக்குவரத்து செலவு மிச்சம்- இங்கு பணி புரியும் ஒரு கனிஷ்ட முகாமைத்துவ ஊழியர் ஒரு பெண் ஊழியரை தினமும் அவரது வீட்டுக்கே சென்று கூட்டி வரும் அவரது பணி முடியும் வரை காத்திருந்து கூட்டிச்செல்லும் சாரதியாக செயற்படுவதாக தகவல்-அத்துடன் அவர் தான் வீரகேசரியின் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் என நக்கலடிக்கின்றனர்..
04.நியாயம் பேசக்கூடாது (பேசினால் அடுத்த வேலையை உறுதி செய்து விடவும்,பேசிய நாளிளிருந்தே வெட்டு குத்துக்கள் ஆரம்பிக்கும்.


 மீண்டும் எழுதுவேன். தயவு செய்து என்னுடைய பெயரை உபயோகிக்க வேண்டாம்.




No comments:

Post a Comment