Saturday, June 25, 2016

சமீபத்தில் நடந்த கல்யாணத்துக்கு கார்ட் டிசைன் பண்ணிய விவகாரம்


(வே. தர்மபாண்டியன்)



வீரகேசரியின் கனிஷ்ட நிலை உத்தியோகத்தர் ஒருவருடைய மகனுக்கு பிரமாண்ட கல்யாண வைபவம் கொழும்பில் நடைபெற்றது.



கல்யாணம் என்னவோ தனிப்பட்ட வீட்டு வைபவம் தான். ஆனால் இங்கு நடந்தது அவ்வாறான ஒன்றல்ல.



கல்யாணத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு ப்ரமோஷன் தினேஷ் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டார். அவருடைய தொடர்புகள் அதிகம் தேவைப்பட்டதால் அவரது உபயோகமும் அவசியப்பட்டது.



பல நேரங்களில் தினேஷ், அந்த உத்தியோகத்தரின் காரில் அலுவலக நேரங்களில் அனுப்பி வைக்கப்பட்டார். சரி அதுதான் எம்டி முதல் செந்தில் வரை எல்லாரும் செய்யும் விடயமாயிற்றே. தினேஷ{ம் எடுப்பார் கைப்பிள்ளைதானே!



அது இருக்கட்டும். விவகாரமான விடயத்துக்கு வருவோம்.



இந்தியாவுக்கு சென்ற கலாபக் காதலன் (அவரேதான்).



அங்கு தன் மகனுக்கு உரிய கார்ட் டிசைன் ஒன்றை பார்த்துவிட்டு பல சாம்பிள்களை அள்ளிக்கொண்டு வந்தார்.



இங்கு வந்து பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுடும் கதையாக பலரிடம் கொஸ்ட் பற்றி விசாரித்தார்.


இறுதியில் எப்படியோ கார்டை டிசைன் பண்ணும் பொறுப்பை மார்க்கட்டிங் இல் உள்ள வரைஞர் ஒருவரிடம் கொடுத்தார். அவரும் திறமைசாலிதான்.

அவர் தான் அந்த கார்டை அழகாக டிசைன் பண்ணினார். திறமைக்கு பாராட்டுக்கள்.


ஆனால் அந்த கார்டை டிசைன் பண்ணுவதற்கு பல காலம் எடுத்தது அவருக்கு. அவை அத்தனையும் அலுவலக மணித்தியாலங்கள்.

கலாபக்காதலனுக்கு எதிராக ஒன்றும் சொல்ல முடியாத காரணத்தினால் மார்க்கட்டிங் ஹெட், மிஸ்டர் குடுத்தார் குஞ்சுப்பிள்ளையும் அமைதியாக இருந்துவிட்டார்.



கல்யாணத்துக்கு முதல் அலுவலக நேரத்தை மிக அதிகமாக மார்க்கட்டிங் இல் செலவழித்தார் கலாபக் காதலன்.


அட சொந்த வேலைக்கு இப்படி நச்சரிக்கிறானே இந்த மனுஷன் என அந்த வரைஞரும் பல சந்தர்ப்பங்களில் அலுத்துக்கொண்டார்.

ஆனாலும் “சின்ன எமவுன்ட் தாறேன்” என்ற கலாபக் காதலனின் சொல்லுக்கு மயங்கி ஆடத் தொடங்கினார் வரைஞர்.



இறுதியாக கார்ட் டிசைன் பண்ணப்பட்டு அது பிரின்ட் செய்யும் வேலையும் மார்க்கட்டிங் டிப்பார்ட்மன்டில் நடந்தது.



இவை குறித்து கு.நடேசனோ மேலதிகாரிகளோ கரிசனை கொள்வதில்லை. இதுவே சிற்றூழியர்கள் செய்தார்கள் என்றால் அங்குதான் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை.


எடிட்டோரியலில் எத்தனை ஹாஃப்ஷீட் இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்து பழிவாங்கும் தயாளனுக்கு கூட வெண்ணெய் காட்டியிருக்கிறார் கலாபர்.

இந்தக் கட்டுரை வெளியாகும் வரை வரைஞரின் இ ட்ரைவில் அந்த டிசைன் ஆர்ட் வர்க் இருந்தது.

No comments:

Post a Comment