Monday, June 20, 2016

சந்திரன் எல்லோருக்கும் வெட்டுகிறார் - சந்திரனுக்கு வெட்டுவது யார்?


(நா.சாரல்நாடன்)

ஊழியர்களிடம் சூட்சுமமாக கொள்ளையடித்தல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது மறைமுகமாக சுரண்டுதல் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இதனை ஆங்கிலத்தில் பிரசுயுமபலி எக்ஸ்ப்லொய்டிங் என்று சொல்லுவார்கள்.

இது வீரகேசரியில் மிக நீண்டகாலமாக நடைபெற்று வரும் செயற்பாடாகும். இது பற்றி ஊழியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பலர் அறிந்திருந்தாலும் ஆளணித் துறைக்கு சென்று கேட்பதற்கு திராணியில்லை.



சரி, விடயத்துக்கு வருவோம்.

மாதாந்தம் சம்பள விபரச் சீட்டு கிடைத்தவுடன் அதில் ஏதோ ஒரு வகையில் சிறு தொகை கழிக்கப்பட்டிருக்கும். நோபே என்றொரு தொகை அடிக்கடி வெட்டப்படும். அதற்கு உரிய காரணம் சொல்லப்படுவதில்லை. ஊழியர்களும் அது சிறுதொகை தானே என விட்டுவிடுகிறார்கள்.

அதேபோல ஸ்டேம்ப் ச்சார்ஜர்ஸ் என்றொரு தொகை வெட்டப்படும். அதைப்பற்றி கேட்கப்போய் சும்மா எதற்கு வம்பு என விட்டுவிடுகிறார்கள்.

இவ்வாறு ஊழியர்களுக்கு கொடுப்பதை போன்று கொடுத்து எடுப்பதை எடுத்துக்கொள்வதுதான் நான் மேற்சொன்ன விடயம்.

இதனை செய்வதற்கு வீரகேசரி தெரிவு செய்த மிகப் பொருத்தமான நபர்தான் சந்திரன். மாதம் முடிவடைந்தவுடன் ஆம குஞ்சியிடம் போய் தலையை சொறிந்துகொண்டு, "சேர் மே செர மம கொடக் நோபே கெப்புவா சேர்" என்பார். 

அதற்கு ஆம குஞ்சி, "எஹெமத சந்திரன், ம்ம் ஹொந்தய் ஹொந்தய்" என்பார்.
இந்த ஹொந்தய் என்ற சொல்லுக்காக கோடிக்கணக்கில் நிறுவனத்துக்கு சம்பாதித்துக்கொடுப்பதைப் போல பெருமைபட்டுக்கொண்டு அடுத்த மாதம் எப்படி இந்தத் தொகையை கூட்டலாம் என நினைப்பார் சந்தரன்.

உண்மையில், ஊழியர் சேமலாபம் அல்லது ஊழியர் தொழில் விதிமுறைகள் பற்றி எந்த அறிவும் சந்திரனுக்கு கிடையாது.

உதாரணத்துக்கு, எக்ஸ் என்ற நபர் பத்தரமுல்லையில் கவரேஜ் ஒன்றுக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கவரேஜ் இரவு 9 மணிக்கு முடிகிறது. எக்ஸ் இன் வீடு நாவலவில் இருக்கிறது.

இனி அலுவலகம் வந்து பின் வீட்டுக்கு செல்வதை விட இப்படியே வீட்டுக்குச் சென்றுவிடலாம் என தீர்மானிக்கிறார் எக்ஸ்.

அதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால் சந்திரனின் சட்டத்தின் பிரகாரம் அது பெரிய தப்பு.

முழுநாளும் பாடுபட்ட அந்த எக்ஸ் க்கு சந்திரன் வழங்கும் பரிசு நோபே.
இந்த விடயம் ஆம குஞ்சிக்கு தெரியாது. ஆம குஞ்சிக்கு நோபே பெரிய தொகையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
ஏன், தொரகுட்டி,சொப்னாவும் இதற்குத்தான் ஆசைப்படுவார்கள்.

தொழிலாளர் நியமப்படி இவ்வாறான தொழில் செய்வோர் கட்டாயம் சட்டவிதிமுறைகளைப் பற்றிய அறிவுடையவராகவும் அத்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
ஆனால் கணனியைத் தொட்டால் கைநடுங்கும் சந்திரன் எத்தனையோ பேரின் வாழ்க்கையில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார்.
நிற்க,
சந்திரன் எல்லோருக்கும் வெட்டுகிறார், சந்திரனுக்கு வெட்டுவது யார்?
சந்திரனுக்கு எந்த மாதத்திலும் நோபே வந்தது கிடையாது. பத்துநிமிடம் தாமதமாகி வந்தாலும் சம்பளத்தை வெட்டும் அவர் அடிக்கடி அலுவலகத்துக்கு வருவது எத்தனை மணிக்கு என்பது எல்லாருக்கும் தெரியும்.

அவருக்கு ஓவர் டைம் வழங்கப்படுகிறது. நீங்கள் கவனித்துப் பாருங்கள். சனி,ஞாயிறு,போயா தினங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை அவர் வேலை செய்கிறார்.
அப்படி என்னதான் ஆணியை பிடுங்குகிறார் என்றால் ஒரு மண்ணும் இல்லை.
மனிதாபிமான அடிப்படையில் ஆம குஞ்சியினால் அனுமதிக்கப்பட்டு ஓவர் டைம் வழங்கப்படுகிறது அவ்வளவுதான்.
இந்தப் பதிவு சந்திரனுக்கு எதிரானது அல்ல. இவ்வளவு நாசகாரம் காலம் காலமாக நடந்துகொண்டிருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு ஞாபகப்படுத்தத்தான்.

அதுமட்டுமல்ல, மாடாய் உழைத்தாலும் இறுதியில் தேய்மானங்களை வாங்கிக்கட்டிக்கொள்ளும் ஊழியர்களும் சிந்திக்க வேண்டும்.
இனியும் காரணமில்லாமல் சம்பளம் குறைக்கப்பட்டால் தயங்காமல் தொழில் திணைக்களத்தில் முறையிடுங்கள்.
தொழில் திணைக்கள ஆணையாளர் சி. அமரதுங்கவை (011-2581998) நாம் இது தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அவர் இலஞ்சம் வாங்காதவர் ( என நம்புகிறோம் ).

உயர் அதிகாரிகளுக்கும் இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கும் சம்பளத்தை தயாரிப்பவர் வெள்ள காக்காவின் செயலாளர். அவர் ஊழியர்  விவகாரம் குறித்து  தெளிவுபெற்றவர். ஆதலால் அந்த அதிகாரிகளுக்கு இவ்விதமான கொள்ளையடிப்புகள் நடைபெறுவதில்லை.

ஆனால் சாதாரண ஊழியர்களுக்கும் கடைநிலை ஊழியர்களுக்குமே இந்த அநியாயம் நடக்கிறது.
அநேகமாக வெளிநாட்டுக் கம்பனிகள் உள்நாட்டில் இலாப நோக்கில் செயற்படும்போது இவ்வாறான சுரண்டல்கள் இடம்பெறுவது வழமை. ஆனால் ஒரு தமிழ்க் கம்பனியில்? அதுவும் முன்னணி ஊடக நிறுவனத்தில்?


தொடர்ந்தும் பேசுவோம். நன்றி.

No comments:

Post a Comment