Tuesday, July 30, 2019

சொல்லியடிப்பான் அல்லிராஜா!

-ஹரிச்செல்வன் சத்தியமூர்த்தி-

வாழ்க்கை ஒரு முடியாத பயணம். இறப்போடு இம்மை முடிந்துவிடுகிறது என நினைக்கிறோம். ஆனாலும் வாழும் காலத்தில் எமது எண்ணவோட்டங்கள், நாம் விதைத்தவை எப்போதும் மரணிப்பதில்லை.

உதாரணத்துக்கு ஒருவருக்குப் புதிய வார்த்தையொன்றை கற்றுக்கொடுத்திருந்தோமானால், அந்த வார்த்தையை அவர் நினைவில் வைத்திருப்பாரானால் அதனூடாக நாம் வாழ்கிறோம் என அர்த்தம். மற்றுமொரு உதாரணத்தைச் சொல்கிறேன் - ஒரு மாமரத்தை நாம் விதைத்து வளர்த்துவிட்டிருந்தால் அந்த மரம் எமது எண்ணங்களைச் சுமந்துதான் வளருமாம். அதற்கு எம்மை அறிந்துகொள்ளும் திறன் இருக்கிறது.

ஒரு பூஞ்சோலையில் - கவலையுடன், மன விரக்தியுடன் உள்ள ஒருவரை முதல் நாளும் சந்தோஷமாக இருக்கும் இன்னொருவரை மற்றைய நாளும் நடந்து சென்று கொஞ்ச நேரத்தை அங்கு கழிக்கச் சொன்னார்களாம். அந்த நேரத்தில் -முதல்நாள் பூக்களில் வாட்டம் காணப்பட்டதாகவும் மறுநாள் அவை செழிப்பாக இருந்ததாகவும் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எண்ணங்கள் தான் மனிதனை வழிநடத்துகின்றன. தூய்மையான சிந்தனையுள்ளவர்கள் எப்போதுமே பிரகாசமாக இருக்கிறார்கள்.
என்ன? மேற்சொன்ன விடயங்கள் அனைத்தும் தலைப்போடு தொடர்புபடவில்லை என நினைக்கிறீர்களா?

தலைப்பு ஒரு சுவாரஷ்யத்துக்காக இட்டது தோழர்களே!
அண்மையில் ஒரு பிரிவில் உள்ள இளசுகள் (சில பழசுகளும்) குறுகிய சுற்றுலா ஒன்றுக்கான திட்டமிடல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஓர் இளம் சிட்டு, தான்னுடைய காதல் சிட்டையும் அழைத்துவர மிக இரகசியமாக, நெருக்கமான ஒருவரிடம் அனுமதி கேட்டதாம்.

அந்தக் கதை எப்படியோ தலைமையாளரிடம் சென்றுவிட தன்னிடம் இந்தக் கதையைச் சொன்னவரிடம் கடுகாய் பொறிந்துவிட்டாராம்.

அதற்கு அவர் சொல்லியிருக்கிற காரணம் இதுதான் -
“எனக்கு அவளை வேறொருவருடன் பார்க்க முடியாது”

என்ன கொடுமை சரவணா! வயதில் மூத்தவர் எப்படியொரு எண்ணத்தை தனக்குள் வளர்த்திருக்கிறார். வெளியில் வேஷம்போடும் இவ்வாறானவர்களை நாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரத் தயங்கமாட்டோம்.

அதற்கான நேரம் இதுவல்ல எனப் பொறுத்திருக்கிறோம். லுணுகலையில் சிறு வயதில் சல்லாபம் செய்ததை, விடலைத்தவறு என விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த வயதிலும் ஆசை கொண்டு அடைய முற்படுகின்றவர்களை காலத்திற்கேற்றாற்போல வெளிக்கொண்டு வருவோம்.

எண்ணங்களை முறையாகவும் தூய்மையாகவும் அமைத்துக்கொள்வோம் தோழர்களே. அதைவிடுத்து, எல்லாப் பெண்களுக்கும் ஆசைபடுவது முறையல்ல, அவரது பதவிக்கும் வயதுக்கும் பொருத்தமில்லை என்றே சொல்ல வேண்டும்.

கிழமையில் 3 நாட்களுக்கு அவருக்குத் தலைவலி வந்துவிடும். சித்தாலேப்பையை அப்பிக்கொண்டு ஒரு சீன் காட்டுவாரே...அதனால் அந்தப் பிரிவில் உள்ள அனைவருக்குமே தலைவலிதான். இதுதான் ஒருவரின் எண்ண அலைகள் எவ்வாறு மற்றையோரைப் பாதிக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம்.

Friday, July 26, 2019

குறிஞ்சியில் முல்லைப் பெண்!

-சந்திரா கார்த்திகேயன்-

ணி, அதிகாலை ஆறு தாண்டியிருந்தது.

நெடிது வளர்ந்து மலைத்து நிற்கும் மலைகளுக்கிடையில் பவ்வியமாய் படுத்துறங்கிக்கொண்டிருந்த மேகக் கூட்டங்கள் மெல்லிதாய் அசையும் அழகு உள்ளத்தில் ஆனந்தத்தை நிறைக்கிறது. மேகம் கரையக் கரைய இரவில் பூத்த முல்லைப் பூ மெதுவாய் தலைகாட்டுகிறது.

உண்மையில் இயற்கை எத்தனை அழகானது! அது அள்ளித்தரும் கொடை எத்தனை புதுமையானது!

ஒவ்வொரு விடியலும் புது இரத்தம் பாய்ச்சுவது போல அதிசயங்களைக் கொட்டுகிறதே? இரசனை உள்ளவர்களுக்கு இயற்கை ஓர் அட்சயம். அதிலும் மலையிடுக்குகளில், சிற்றருவியின் இசையோடு வாழ்தல் பெருந்தவம்.

இத்தனையும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் போது கைப்பேசி அழைப்பு கொடுத்தது.

“ஹலோ”
“நான் நிரோ” (கற்பனைப் பெயர் :))
“பெயர் விழுந்தது. சொல்லுங்கண்ணா”
“இன்னிக்கு ஒரு எசைமன்ட் இருக்கு. காலிக்குப் போகனும். முடியுமா?”
“நான் ஊருக்கு வந்திருக்கிறேன் ணா”
“பரவால்ல. இன்னைக்கு ஈவினிங் தான் போகனும். அங்க தங்கனும். நாளைக்கு ஃபுல் டே வர்க்ஷொப் இருக்கு. அது முடிய கொழும்புக்கு வரலாம்”
“என்ன வர்க்ஷொப் ணா”
“என்ன வார்த்தைக்கு வார்த்த அண்ணா, அண்ணானு சொல்றீங்க”
“சரி சொல்லுங்க”
“என்னையும் உங்களையும் போகச் சொல்லித்தான் பொஸ் சொன்னாரு. நீங்க ஈவினிங் இங்க வாங்க. போகலாம்”
“சரி அண்ணா, நான் பார்த்திட்டு கோல் பண்றேன்”
“கட்டாயம் வாங்க. சான்ஸ்ஸ மிஸ் பண்ணக் கூடாது. இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் ஒன் பிரின்ட் என்ட் வெப். நீங்க க்ரைம் ஸ்டோரிஸ் செய்றனால இது உதவியா இருக்கும்”
“ம்.. சரிண்ணா”

ஜன்னல்வழியே இயற்கை என்னை அழைத்துக்கொண்டிருந்தது. இலேசான பனி, ஒருவகையான வாசத்தோடு இடமிருந்து வலம் போய்க்கொண்டிருந்தது.

அந்த வாசம் முல்லைப் பூக்களால் பிரசவமானது.

மல்லிகை இனமாயினும் முல்லைக்குத் தனியிடம் உண்டு. எங்கள் வீட்டு முற்றம் முழுவதும் முல்லைப் பூக்கள் எப்போதுமே வரவேற்பதுண்டு. மல்லிகையில் தேனில்லை. முல்லையில் தேனுண்டு என்பார்கள்.

என் குழந்தைப் பராயத்தில் முல்லையை அக்குவேறாகப் பிரித்து ஆராய்ந்ததை மறக்கவே முடியாது.
என் எண்ண அலைகளையெல்லாம் ஒரு கோப்பை தேநீர் பறித்துவிட்டது.

என்ன வர்க்ஷொப்? அப்படி இதுவரை அறிவிக்கவில்லையே? அதுவும் இவரோடு நான் எப்படிச் செல்வது? பலகோணங்களில் சிந்தித்தேன். என் ஊடகத் தோழியர் பலருக்கு அழைப்பெடுத்துக் கேட்டேன்.
அப்படியொன்றும் இல்லை எனப் பதில் வந்தது.

அவ்வாறெனின், அண்ணனின் நோக்கம் என்ன? அவர் காதல் வயப்படுவதுபோலப் பேசும்போது விளையாட்டாக எடுத்துப் பதிலளித்ததை சாதகமாக எடுத்துக்கொண்டாரா?

ஒரே உணவை இருவரும் பகிர்ந்து உண்டதை, பொருள் மாற்றி எடுத்துக்கொண்டாரா? இப்படிப் பலதும் உருண்டோடுகின்றன.

மணி, ஏழு இருபதைக் காட்டியது.

அழைத்தே கேட்டுவிடலாம் என்ற முடிவோடு எண்களைத் தட்டினேன்.

“ஹலோண்ணா”
“சொல்லுங்க மா”
“வர்க்ஷொப் எங்க நடக்குது? யார் நடத்துறாங்க?”
“எனக்கும் தெரியாது. போவோம். நடக்கல னா வந்திருவோம். அவ்வளவு தானே? இதற்கு ஏன் டென்ஷன்?”
“தங்குறதெல்லாம்?”
“என்கூட தங்க தங்க மாட்டீங்களா? நைட் மட்டுந்தானே?”
“என்ன சொல்றீங்க?”
“பயப்படாதீங்க ஒன்னும் பண்ண மாட்டேன் டியர். இப்போ எனக்குத் தான் கொழும்பு நியூஸ் ரூம பொறுப்பு கொடுத்திருக்காங்க. தெரியும் தானே?”
“அதுக்கு?”
“யோசிச்சி முடிவெடுங்க. ஜர்னலிசம் னு வந்திட்டா... எல்லாத்தையும் எட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகனும்”

கைப்பேசியைத் தூக்கி கட்டிலில் எறிந்துவிட்டு, எஞ்சியிருந்த தேநீரை இரசித்து ருசித்தேன். இரசனைகளைத் தவறவிட்டுவிட்டால்... எப்போது? எங்கே இரசிப்பது?

பல முறை அழைப்பு- அண்ணாவிடமிருந்து!
நான் இறுதிவரை ஒத்துழைக்கவில்லை.
மறுத்து மறுத்திருந்தேன்.

அதனால் நான் மிகவும் நேசித்த ஊடகத் தொழிலையும் விடவேண்டியதாயிற்று.

என் இரசனை, இயற்கை மீதான காதல் அனைத்தையும் பொடியாக்கிப்போட்ட அழைப்பு அது. மறக்க நினைக்கிறேன் என்பதாலோ என்னவோ இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். நெஞ்சில் ஆறாத வடுக்களுடன்.

என்னைப் பெண்பார்க்க வந்தவர்கள் பலரும் என்னுடைய நிறத்தை வெறுத்தார்கள். நான் கவலைகொள்ளவில்லை. எனக்கான, எனக்கேயான காதல் எங்கேயாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்காதவளாக வாழ்ந்தேன்.

ஆனால் என் உடம்புக்கு ஆசைப்பட்டவனை அன்றுதான் பார்த்தேன். இத்தனை நாட்களும் இப்படியொரு நினைவோடுதான் என்னோடு பழகியிருக்கிறான் என நினைக்கும் போது வெந்துச் சிதைகிறது மனது!

ஆகட்டும்! இப்போது இந்த நிமிடத்தில் எந்தப் பெண் அவனுடைய வலையில் வீழ்ந்திருக்கிறாளோ யான் அறியேன்!

குறிஞ்சி மண்ணில் முல்லை வாசம் வீசுகிறது – ஆனால் இரசிப்பதற்கு என்னைத் தவிர யாருமில்லை தோழர்களே!

Wednesday, July 10, 2019

பிச்சை போடும் ஆம குஞ்சான்!

-ஸ்ரீகரன் சந்திரமௌலீஸ்வரன்-

வணக்கம் உறவுகளே,

கடந்த சில மாதங்களாக உங்களைச் சந்திக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. எங்களது குழுவில் இருந்த சிரேஷ்ட அங்கத்தவர் ஒருவர் எமது கூகுள் கணக்கினை தன்வசப்படுத்தியிருந்தமையே இதற்குக் காரணமாகும்.

அது ஒருபக்கம் இருக்கட்டும்.

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களும் ஏக்கலைக்கு அனுப்பப்பட்டு கார்ப்பரேட் முறையில் அடிமைகளாக நடத்தப்படுவது நாம் அறிந்த உண்மை. ஆனபோதும் தமிழ் நிறுவனம் என்பதற்காகவும் தமிழ் ஊடகம் என்பதற்காகவும் நாம் அமைதிகாக்கிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

அது அவ்வாறிருக்கும்போது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பிச்சைக்காசு சம்பளம் வழங்கப்படுவது தொடர்பில் நமக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. அதாவது நிறுவனத்தில் இணைந்து இரண்டு, மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவர்களது சம்பளம் 17,500 ரூபாவைத் தாண்டவில்லை. மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு தருவதாக போலியாக உறுதியளிக்கப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட வேளையில் ஏற்றிச்செல்வதற்கு பஸ் தயாராக இருக்கிறது.

இது இப்படியென்றால் கொழும்பில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் பாடு பெரும்பாடுதான். பாவம் அவர்கள். சாதிக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியக் கனவுகளோடு தொழிலில் இணைந்து இன்று நாய்ப்படும் பாடாய் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

இதனால் செய்தியின் தரம் குறையுமேயன்றி வேறென்றும் நடக்கப்போவதில்லை. அத்துடன் உள ரீதியான பாதிப்பு காரணமாக வேறு செயற்பாடுகளுக்கு தள்ளப்படலாம். அதாவது மாற்றுத் தொழில்வாய்ப்புகளை நாடுதல், ஊடகவியலை வெறுத்தல், தமிழ் ஊடகம் தொடர்பில் தவறான நிலைப்பாடு, நிறுவனத்துக்கு எதிராக இயங்குதல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

தற்போதைய சூழ்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமன்றி ஏனையோருக்கும் சம்பளம் குறைவாகவே வழங்கப்படுகிறது. அதாவது அங்கு தொழில்புரியும் சிங்களவர்களுக்கு அதிகூடிய சம்பளம் வழங்கப்படுகிறது. டிஜிஎம் என்ற பதவியில் இருந்து ஆம குஞ்சான் சகலதையும் இயக்குறான்.

அவனை மீறுவதற்கு நிறுவனம் தயங்குகிறது. அதற்கான காரணம் என்னவென்றால் அவன் ஒரு சட்டத்தரணி (ஈயடிச்சான் கொப்பி) என்பதால் நிறுவனம் தொடர்பான சட்ட ஆவணங்களை அவனே தயாரிக்கிறான். ஆதலால் அனைத்து குட்டு, சுத்துமாத்துகளும் அவனுக்குத் தெரியும்.

அவனுக்கு எதிராக யாராவது தலைமை அதிகாரிகள் குரல் கொடுத்தால் அடுத்து நடப்பதே வேறு! அவன் ஆம குஞ்சனாக இருந்தாலும், வீரகேசரி அலுவலகத்தில் மனைவியிடம் செருப்படி வாங்கியிருந்தாலும் தமிழனின் குறைகளை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்த மூளைக் குஞ்சன்.

இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு சாதாரணமாக சிரித்து சிங்காரித்துப் போகும் தலைமைக்கு சில காலத்தின் பின்னர் உண்மை வெளிவரும். ஆனால் அப்போது தரமான, தூர சிந்தனையுடைய ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருப்பார்கள்.

நல்ல வருமானம் கிடைக்கின்ற போது சம்பளம் கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது. சாதாரண சாரதியொருவரின் மாதச் சம்பளத்தை விட பத்திரிகையை நடத்துவதற்கு உறுதுணையாய் இருக்கும் ஊடகவியலாளர்களின் சம்பளம் மிகச் சொற்பம் தான். இதனை உரியவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

ஆம குஞ்சான் - சிங்களவனுக்கு நல்லா குடுப்பான்!

அவன் பற்றி இன்னும் பல உண்மையான தகவல்கள் விரைவில் வரும் நண்பர்களே.

நன்றி.

Thursday, January 10, 2019

விடைபெறுகிறான் சூ தொடச்சான்!

(எம்மானுவேல் கலாபவனி)

வீரகேசரி காலத்துக்குக் காலம் பலரை வளர்த்துவிட்டிருக்கிறது, மேலும் பலரை வீழ்த்திவிட்டிருக்கிறது. தொழில் ரீதியாக, ஆளுமை ரீதியாக, பக்குவம், எளிமை என வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். கோடி, கோடியாய் பணம், வஞ்சகம், சூழ்ச்சி, போட்டுக்கொடுத்தல் என வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

காலம் பதில் சொல்லும் என்பார்களே, அதற்குப் பொருத்தமானதுதான் சூ தொடச்சானின் விலகல்.

சூ தொடச்சானை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது முகாமைத்துவத்தின் மூன்று வருடகாலத் திட்டம். ஆனாலும் நிறுவனத்தின் சகல உள்ளக விடயங்கள் உட்பட அனைத்தும் அவனிடத்தில் காணப்பட்டதாலும் சிவப்புச் சேலை மேல்மருவத்தூர் அம்மாவுடனான மிக மிக நெருக்கமான தொடர்பு காரணமாகவும் விலக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், திட்டமிட்டே சடா க்கும் லவனுக்கும் மேலதிக கடமைகளும் வழங்கப்பட்டு, சூ தொடச்சானைக் கண்காணிக்க வேண்டிய  பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.

மெதுவாக சூ தொடச்சானை அங்கிருந்து அகற்றும் பணிகளில் செவ்வனே இவ்விருவரும் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் வீரகேசரி இணையத்துக்கு மாத்திரம் பொறுப்பாக மாற்றப்பட்ட சூ தொடச்சான், பல் பிடுங்கப்பட்ட பாம்பாகினான்.

பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்களும் உள்ளக ரீதியில் கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான்  கடந்த மாதம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளான்.

அவனது ஏனைய தந்திர சூழ்ச்சிகளையும் மறைமுக பணக்கொடுக்கல்வாங்கல்களையும் கண்டுபிடிப்பதற்காக மேலும் சில வாரங்கள் தொழில்புரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால்  அவன் வெளியில் சென்றுவிட்டால் வைக்கோலுக்குள் விழுந்த குண்டூசி போல மாயமாகிவிடுவான். இப்போது சிவப்புச்சேலை அம்மணிக்கு ஒரே வருத்தமாம். இரண்டு பேரும் சேர்ந்து அடித்த கொள்ளைகளை தொடர முடியாதது ஒருபக்கம், இதுவரையான கொள்ளைகளால் சிக்கிவிடுவோமோ என்றொரு அச்சம்.

ஒரு கோடியே 75 இலட்சம் பெறுமதியான சொந்த வீடு
34 இலட்சம் பெறுமதியான சொந்த வாகனம்
யாழ்ப்பாணத்தில் மூன்று காணிகள்... இன்னும் பல.

ஏக்கலை ப்ரொஜெக்டில் பணப்பறிமாற்றம் நடந்த விதம் பற்றி நாம்  கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தோம். அதுமாத்திரமல்லாது டயலொக் நிறுவன கொடுக்கல் வாங்கல் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

டயலொக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் IT குழுவினருக்குத் தெரியவந்துள்ளது. அதனை அவர்கள் இரகசியமாக எம்.டி.யின் காதுகளுக்கு போட்டுக்கொடுத்துள்ளனர்.
இன்னும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை எமது குழுவினர்கள் ஆராய்கிறார்கள். அதில் கிரியை விரட்டியடித்த சம்பவமும் உண்டு.


விரைவில் சந்திப்போம் தோழர்களே!

மெழுகு பொம்மை

-ஆச்சர்யா சட்குணராசா-

பிரம்மனின் படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவைதான். அவை, தனி மனித இரசனையில் எவ்வாறு நோக்கப்படுறது என்பதைப் பொறுத்து வேறுபடுகிறது.

ஆதிகாலத்தில் நல்ல சிந்தனைகள் இரசிக்கப்பட்டன, போற்றப்பட்டன. ஆனால் கலியுகத்தில் வெளித்தோற்றமே பொதுவாகப் பார்க்கப்படுவதுடன் அதைக்கொண்டே இயல்நிலையும் எடைபோடப்படுகிறது.

இங்கே மெழுகு பொம்மை என்று நான் குறிப்பிடுவது அழகிய, இத்தனை அழகா என வியக்கக் கூடிய ஓர் இளந்தென்றலைப்பற்றிய பதிவாகும்.

எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஆசிரிய பீடத்தில் மாத்திரம் தான் சுமாரான பெண்களை பணிக்கு அமர்த்துவார்கள், மற்றைய பிரிவுகளில் அழகிய பெண்களுக்குக் குறைவிருக்காது என்பது நீண்டகாலமாக நிலவுகின்ற கருத்தாகும்.

(ஆசிரிய பீடப் பெண்கள் கோபிக்க வேண்டாம். நீங்கள் சிந்தனையால் அழகானவர்கள்)

இங்கே பெருந்தலையொன்றின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள மெழுகு பொம்மை அங்கு பணியாற்றும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துவருகிறார். ஒவ்வொரு நாளும் தன்னை வித்தியாசமாகக் காட்ட முற்படும் விதம், பேச்சு, நடை,  பாவனை என அனைத்திலும் ஏனையோரை விட ஒருபடி விஞ்சியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

நாணமும் பயிர்ப்பும் அவளுடைய இரு கண்கள்.
நான் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவளை உற்று, உற்று இரசித்திருக்கிறேன். இன்னும் இரசிக்கிறேன்.

தேவதைகள் வேறு கிரகங்களில் இல்லை, கற்பனைகளிலும் இல்லை. அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பதை அதிகாலையில் அவளுடைய மலர்ந்த முகமும் யாரைப்பார்த்தாலும் இலேசாக புன்முறுவல் செய்யும் பாவனையும் ஒப்புவித்துவிடுகின்றன.

மான்போல துள்ளிச் செல்கையில் அவள் கூந்தல் அசைந்தாடி மகிழுமே... அது ஓர் ஆனந்தம்.
நடுக்கடலின் சிற்றலைகள் போல மெல்லிதாய் இடையசையுமே...அதுவும் ஓர் ஆனந்தம்.

பிரம்மன் குவிவாடி வைத்துப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போல அங்க இலட்சணங்களில், கைதேர்ந்த கலைஞனின் ஓவியம் அவள்.


சரி நண்பர்களே, அத்தனையும் இரசனையோடு மட்டும் இருக்கட்டும்.

அழகான  பெண் என்றாலே, சந்தைப்படுத்தல் பிரிவு ஆடவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனாலும் துரதிர்ஸ்டவசமாக அவள் ஏக்கலையில் தொழில்புரிகிறாள்.

இருந்தபோதிலும் இந்த மெழுகு பொம்மை பற்றி நான் எழுதக் காரணம், அனைவருடைய கவனமும் இந்தப் இளம்பெண் மீது இருப்பதுதான். அழகு என்றாலே ஆபத்துதானே? அது உடனடியாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுவும் பெண் என்றால்??? சொல்லவா வேண்டும்?

இனிவரும் காலம் யாருக்கு ஆபத்தாக இருக்கப்போகிறதோ தெரியவில்லை. எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் இதுவும் கடந்துபோகும் என்பதையும் மனதில்கொள்வோம்.
வாழ்க்கை சிறக்கட்டும்.

(ஸ்ரீலங்கா ஜேர்னலிசம் குழு எனது இந்தக் கட்டுரையை தனது தளத்தில் பிரசுரிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. நானும் குறித்த நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறேன். எனது மின்னஞ்சல் விபரம் வெளியிட வேண்டாம்)

Thursday, January 3, 2019

அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?


சீனியர்கள் என்ன செய்தார்கள்?

(எஸ். ராகவேந்திரா)

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தம்மை சீனியர்கள் என அடையாளப்படுத்திக்கொள்வோர் இளையோரை வளர விட்டிருக்கிறார்களா அல்லது வளர்த்துவிட்டிருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

உதாரணமாக அண்ணன் பிரபாவை எடுத்துக்கொள்வோம். அவரால் இந்தப் பத்திரிகைத் துறையில் வளர்த்துவிடப்பட்டவர்கள் என ஐவரை இனங்காட்ட முடியுமா? எத்தனையோ வருட சீனியர்கள், பத்திரிகை ஜாம்பவான்கள், ஆசிரியராக எத்தனையோ வருடகாலப் பணி என தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவர் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பாரா?

அவர் எப்போதும் சொல்லும் ஒரு விடயம் தான் ஸ்ரீகஜனை நான்தான் வளர்த்துவிட்டேன் என்பதாகும். ஸ்ரீகஜனை அவர் வளர்க்கவில்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

இதே வழியில் அண்ணன் சேதுராமனும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். தனக்குப் பின்னர் மெட்ரோவைக் கொண்டு நடத்த அந்த டிப்பார்ட்மன்ட்டில் ஆள் இல்லை. சேதுராமன் திறமையானவர் அவரைக் குறை கூறுவது எமது நோக்கமல்ல.

ஆனாலும், இந்த விடயத்தில் அவர் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

சூரியகாந்தி சிவகுமாரன் - இவர் சூரியகாந்தி பத்திரிகையை நீண்ட காலமாக கொண்டு நடத்தினார். ஆனால் அவரும் இதே பாணியைப் பின்தொடர்ந்து, சூரியகாந்தி எடிட்டோரியலில் இருந்து  ஒருவரையேனும் பெயர் சொல்லும் அளவுக்கு வளர்த்துவிடவில்லை.

செந்தில் நாதன்- ஆரம்ப காலங்களில் மார்க்கட்டிங் இல் முறையான திட்டமிடலுடன் இளைஞர்களை ஊக்குவித்து வளர்த்தார். ஆனால் இப்போது ஒருவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்றளவுக்கு நிலை இருக்கிறது.

ரேணுகா பிரபாகரன் - இவங்க சொந்தமா எழுதின 10 கட்டுரைகளைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். மிஞ்சிப் போனால் கொஞ்சம் நேர்காணல் செய்திருப்பாங்க. அவ்வளவுதான். ஆனால் உதவி ஆசிரியர் பதவி மற்றும் எத்தனையோ வருட பத்திரிகைத் துறை அனுபவம்.

தயாளன் - சொல்லி வேலையில்லை.

எப்.சி- இவங்க எல்லாத்துக்கும் மேல.

ஆம குஞ்சு எச்.ஆர்- இவன் அடுத்த கட்டம் (ஆம குஞ்சுவின் இரகசிய ஏமாற்று வேலை ஒன்று தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் வெளியிடுவோம்)

சீனியர்கள் என்றால் வழிநடத்தக் கூடியவர்களாக, ஏனையோருக்கு உதாரணமாக விளங்க வேண்டும் என்பதை மனதிற்கொள்க.

இது- யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல. தனி மனிதர்களைத் தாக்குவது எமது நோக்கமும் அல்ல. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மாத்திரமே.

அடுத்த பதிவில் சந்திப்போம். மெழுகு பொம்மை கட்டுரைக்காக வாசகர்கள் காத்திருப்பது நமக்கும் புரிகிறது தோழர்களே!


Tuesday, January 1, 2019

அடைத்து வைக்கப்பட்ட அடிமைகள்!

-கார்த்தி சிவராமன்-

இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு செயற்படும் கம்பனிகள் பல தொழிலாளர்களின் நலன்குறித்துச் சிந்திப்பதில்லை. இதற்குப் பல கம்பனிகள் சான்று.

அதேபோல் வீரகேசரியும் தற்போது ஊழியர்களை சிறையில் அடைத்தது போல இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்டு இயங்குகிறது. இதனைத் தட்டிக் கேட்பதற்கு  நாதியற்றவர்களாக, தினமும்  புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள ஊழியர்கள்.

அதாவது, வீரகேசரி தலைமைக் காரியாலயம் தற்போது ஏக்கலையில் இயங்கி வருகிறது. ஏக்கலை என்றால் ஏக்கலை நகர் அல்ல, அங்கிருந்து சில கிலோமீற்றர் தூரம் உள்ளே செல்ல வேண்டும். அந்த வீதியில் செல்வதற்கு பஸ்கள் இல்லை. கால்நடை அல்லது முச்சக்கர வண்டியில் தான் செல்ல வேண்டும்.

ஊழியர்கள் கொழும்பில் இருந்து பஸ்களில் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மீண்டும் பணி நிறைவின் பின்னர் பஸ்களில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தினமும் பஸ் பயணத்துக்கு மாத்திரம் 4 மணித்தியாலங்கள் செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது அவர்கள் அரைநேர விடுமுறையில் கூட வர முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

வீரகேசரியில் பொதுவாகவே சம்பளம் சொற்ப அளவே வழங்கப்படும். மேலதிக நேர தொழிலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் கொஞ்சம் அதிகமாக உழைத்துப் பணம் பெற்ற காலம் உண்டு. ஆனால் ஏக்கலையில் அது முடியாது. குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். இது திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறையாகும்.

மேலதிக நேர வேலைக் கொடுப்பனவாக மாதாந்தம் 18 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இதுவரை வழங்கப்பட்டு வந்தது. அந்தத் தொகை இப்போது ஆறு இலட்சத்து 81 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி, அவர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாத தொழிற்சாலையாகவே வீரகேசரி தற்போது இயங்கி வருகிறது.
வீரகேசரியில் தொழில்புரிந்தால் ஒருவகையான பெருமை என்பதாலும், வேறு தொழிலைத் தேடிக்கொள்வதில் சிக்கல்களாலும் பெரும்பாலானோர் தொடர்ந்தும் தொழில்புரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் மன ஆதங்கம் சொல்லில் புரிய வைக்க முடியாது.

எம்.டி. உள்ளிட்ட பல பெரும் தலைகள் ஏசி வாகனத்தில் சாரதியருடன் வலம் வந்து கொண்டிருக்கையில் ஏனைய ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். நீண்ட தூர பயணம் என்பதால் உடல் ரீதியான அசதியுடன் நோய்வாய்ப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது உள ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
குடும்பத்துடன் நேரத்தை கழிக்க முடியாத பெரும் சோகம் அங்கு தொழில்புரியும் எல்லாருக்கும் உண்டு.

ஏன் ஏக்கலையில் அலுகலகம் அமைக்க வேண்டும்?

சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான உற்பத்தி இயந்திரங்கள் தலைநகர் கொழும்புக்கு வெளியில் நிறுவப்பட வேண்டும் என்ற கடப்பாட்டை அரசாங்கம் கொண்டு வந்திருந்தது.
அந்த வகையில் பத்திரிகை அச்சு இயந்திரத்தை மாத்திரம் கொழும்புக்கு வெளியே நிறுவ வேண்டி வந்தது.

அதற்கு, வத்தளை, இராஜகிரிய போன்ற பகுதிகளையும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் பெருந்தலைகளுக்கு கொமிஷன் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருந்ததால் சுய நலனுக்காகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய அச்சு இயந்திரம் எங்களுடையது எனச் சொல்லிக்கொள்ளும் முகாமைத்துவம் அதனை இலங்கைக்கு கொண்டு வருவதில் பெரும் தொகையான கொமிஷனைப் பெற்றுக்கொண்டது.

அது மாத்திரமல்லாது ஏக்கலையில் நிலத் தெரிவில் யார், யார் எம்.டி.யை ஏமாற்றி கொமிஷன் அடித்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
உரிய நிலத்தைப் பெற்றுக்கொடுப்பவர்களுக்கு 3 வீத கொமிஷன் வழங்கப்படும் என எம்.டி. அறிவித்திருந்தார். ஆனால் அதனையும் தாண்டி மூவர் அடித்த கொமிஷன் தொகையோ கோடிகளுக்கு வெளியேயான தொகையாகும்.

அது மாத்திரமல்லாது இன்னும் பல தகவல்கள் உண்டு. அவற்றை இனி வரும் காலங்களில் பதிவு செய்வோம்.
ஆனாலும் இப்போது ஊழியர்களை அடிமைத்தனமாக, சிறைக்குள் பூட்டி வைத்து வேலை வாங்கும் இந்த நிறுவனத்துக்கு எதிராக யார் செயற்படுப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறி.

என்னதான் இருந்தாலும் ஊழியர்களின் சாபம், அனைத்துக் கள்ளப் பூனைகளையும் சும்மா விடாது என்பதே உண்மை. காலம் நிச்சயமாகப் பதில் சொல்லும். காத்திருப்போம்.