Saturday, June 11, 2016

சுட்டுப் பெயர்கள் (ச்சும்மா ஜோக் தான் போங்கோ!)

கொம்பேறி மூக்கன்

நேரடியாக பெயரை குறிப்பிட்டு எழுத வேண்டாம் என எமக்கு பலர் அறியத்தந்தார்கள். அப்படி எழுதுவதால் அவமானம் ஏற்படுகிறதாம். அதனால் எமது குழுவினர் நேற்றிரவு கூடி தீவிரமாக ஆராய்ந்து பெயர் வைத்தோம்.

சுட்டுப்பெயர்கள் இதோ,
  • நடேசன் - வெள்ள காக்கா
  • செந்தில் - தொர குட்டி
  • அமுனுகம – சொப்னா
  • சமரவிக்ரம – ஆம குஞ்சி
  • தயா - சூதொடச்சான்
  • பிரபா – தொங்கு நானா
  • கஜன் - ச்சீ சாமி
  • ஜோசப் - பப்பரே


இந்தக் குழந்தைள் இனிமேல் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுவார்கள். ஆமென்!


காசு பணம் துட்டு மணி மணி! (பகுதி 1)

அ. செங்கோட்டுவன்

வீரகேசரியின் I.T. புலி தயாளன், ஏக்கலை புரொஜெக்டில் கொள்ளையடித்த விவகாரம் யாவரும் அறிந்த சமாச்சாரம். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு என எத்தனை பேருக்கு தெரியும்?

ஏக்கலையில் காணி பார்ப்பதற்கு நடேசனால் இருவர் நியமிக்கப்பட்டனர். காணி பார்த்தபின்னர் மொத்த தொகையில் 3 வீதம் கொமிஷன் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் காணியை பார்த்து காசை ஏப்பம் விட்ட ஆசாமிகள் இருக்கிறார்கள். அவர்களில் அணில் குஞ்சுவுக்கும் பங்கு உண்டு. இது பற்றிய விரிவான தகவலை பின்னர் தருகிறோம்.

இந்த புரொஜெக்டில் தயாளன் எப்படி காசை வாரி அள்ளிக்கொண்டார் என்பதுதான் கேள்வி.

ஏக்கலை புரொஜெக்ட் சம்பந்தமான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பாக தயாளன் நியமிக்கப்பட்டார். அங்கு இலெக்ட்றிக் வேலைகள் உள்ளிட்ட திட்டமிடல்கள் அனைத்தையும் தயாளன் பார்த்தார். எங்கு சாமான்கள் கொள்வனவு செய்கிறாரோ அவர்களிடமிருந்து கொமிஷனை பெற்றுக்கொண்டார். அது சாதாரண சிறிய தொகை அல்ல.

இந்த கொள்ளையடிப்பு விடயத்துடன் அமுனுகமவுக்கு மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 

கிராண்ட்பாஸ் அலுவலகத்திலிருந்து ஏக்கலைக்கு இயந்திரத்தை மாற்றுவதற்கு செலவாகிய தொகை எவ்வளவு தெரியுமா? நாற்பது இலட்சம்.

இதில் தயாளனுக்கு மூன்றரை இலட்சமும் அமுனாவுக்கு ஒன்றரை இலட்சமும் பங்கு. தயாளன் இன்னும் ஆத்தல் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். இவை தவிர ஏனைய கொள்வனவு கணக்குகளனை அடுத்த பதிவில் தருகிறோம்.

உயரதிகாரிகளின் விஷயம் என்பதால் இவை வெளி உலகத்துக்கு தெரிய வருவதில்லை.

(இன்னும் வரும்)

வீரகேசரியில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு என்ன? (பகுதி 1)

-தென்னவன் இளங்கோ-

வீரகேசரி நிறுவனம் இலங்கையில் பழைமையான பத்திரிகை ஸ்தாபனமாகும். பத்திரிகை தர்மத்தை பின்பற்றுவதாக கூறிக்கொண்டாலும் அதன் முகாமைத்துவமும் நிர்வாகமும் இரத்தம் உறிஞ்சும் போக்கிலேயே செயற்பட்டு வருவது கண்கூடு.



சரி, தலைப்புக்கு வருவோம். வீரகேசரியில் பெண்கள் பாதுகாப்பாக நடத்தப்படுகின்றார்களா? என்றால் அதற்குப் பதில் நூற்றுக்கு 20 வீதம் என்றே சொல்ல வேண்டும்.

வீரகேசரி வார வெளியீட்டுப் பிரிவில் உள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பே இல்லை. குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆசிரியரின் காமப்பார்வைக்கும் காமப் பேச்சுக்கும் இலக்காகி வருகின்றனர்.

பாலியல் ரீதியாக அவரால் இயங்க முடியாது என சொல்லப்படுகின்ற போதிலும் பார்வையால் அனைத்தையுமே செய்துவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு ஆசிரியப் பகுதியை எழுதுவதற்கு பெண்ணொருவர் தேவை. பிறர் எழுதிய கட்டுரைகளை கூட வாசிப்பதற்கு பெண்கள் தேவை. அவ்வாறு தன்முன்னால் வந்து அமர்ந்து வாசிக்கும் பெண்களின் மார்பை உற்றுப் பார்க்கும் வழக்கத்தை சுமார் 20 வருடங்களாக மேற்கொண்டு வருகிறார்.

தற்போது பதுளை மாவட்டத்திலுள்ள பெண்ணொருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகிறார்.

வாரவெளியீட்டின் ஆசிரியர் படித்தது வளர்ந்தது எல்லாமே மலையத்தில் தான். அவருடைய தந்தை இரத்தினசபாபதி லுணுகலையில் கள நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருந்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ஆசிரியர் கூட அதனை எப்போதும் வெளியில் சொன்னதில்லை.

இப்படியிருந்த ஆசிரியர் பெண்களை குறிவைப்பதை நிறுத்தமாட்டார் போலிருக்கிறது. இனி அவருடைய அராஜகம் தொடருமானால் பல உண்மைச் சம்பங்களை நாம் போட்டுடைக்க நேரிடும்.

இது ஒரு பிரிவில் நடக்கும் சம்பவம் தான். அடுத்த பகுதிகள் தொடர்பானவை விரைவில் வெளிவரும்.

புதிய பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்

சமூக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் வெகுஜன ஊடகங்களின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

நியாயம், தர்மத்தைப் பற்றிப் பேசும் ஊடகங்கள் தமது ஊடகவியலாளர்கள் குறித்து சிந்தித்ததாக வரலாறு இல்லை. அதனை மாற்றும் எண்ணத்துடனேயே இந்த வலைத்தளம் உருவாக்கப்படுகிறது.

உண்மைகளை வெளிப்படையாகச் சொல்லும் நோக்கில் இங்கே பதிவுகள் அமைந்திருக்கும். உங்களது கருத்துகளையும் கட்டுரைகளையும் வரவேற்கிறோம்.

அன்புடன்,
ஆசிரியர் - இலங்கை ஊடகவியல்