Thursday, January 10, 2019

மெழுகு பொம்மை

-ஆச்சர்யா சட்குணராசா-

பிரம்மனின் படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவைதான். அவை, தனி மனித இரசனையில் எவ்வாறு நோக்கப்படுறது என்பதைப் பொறுத்து வேறுபடுகிறது.

ஆதிகாலத்தில் நல்ல சிந்தனைகள் இரசிக்கப்பட்டன, போற்றப்பட்டன. ஆனால் கலியுகத்தில் வெளித்தோற்றமே பொதுவாகப் பார்க்கப்படுவதுடன் அதைக்கொண்டே இயல்நிலையும் எடைபோடப்படுகிறது.

இங்கே மெழுகு பொம்மை என்று நான் குறிப்பிடுவது அழகிய, இத்தனை அழகா என வியக்கக் கூடிய ஓர் இளந்தென்றலைப்பற்றிய பதிவாகும்.

எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஆசிரிய பீடத்தில் மாத்திரம் தான் சுமாரான பெண்களை பணிக்கு அமர்த்துவார்கள், மற்றைய பிரிவுகளில் அழகிய பெண்களுக்குக் குறைவிருக்காது என்பது நீண்டகாலமாக நிலவுகின்ற கருத்தாகும்.

(ஆசிரிய பீடப் பெண்கள் கோபிக்க வேண்டாம். நீங்கள் சிந்தனையால் அழகானவர்கள்)

இங்கே பெருந்தலையொன்றின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள மெழுகு பொம்மை அங்கு பணியாற்றும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துவருகிறார். ஒவ்வொரு நாளும் தன்னை வித்தியாசமாகக் காட்ட முற்படும் விதம், பேச்சு, நடை,  பாவனை என அனைத்திலும் ஏனையோரை விட ஒருபடி விஞ்சியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

நாணமும் பயிர்ப்பும் அவளுடைய இரு கண்கள்.
நான் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவளை உற்று, உற்று இரசித்திருக்கிறேன். இன்னும் இரசிக்கிறேன்.

தேவதைகள் வேறு கிரகங்களில் இல்லை, கற்பனைகளிலும் இல்லை. அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பதை அதிகாலையில் அவளுடைய மலர்ந்த முகமும் யாரைப்பார்த்தாலும் இலேசாக புன்முறுவல் செய்யும் பாவனையும் ஒப்புவித்துவிடுகின்றன.

மான்போல துள்ளிச் செல்கையில் அவள் கூந்தல் அசைந்தாடி மகிழுமே... அது ஓர் ஆனந்தம்.
நடுக்கடலின் சிற்றலைகள் போல மெல்லிதாய் இடையசையுமே...அதுவும் ஓர் ஆனந்தம்.

பிரம்மன் குவிவாடி வைத்துப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போல அங்க இலட்சணங்களில், கைதேர்ந்த கலைஞனின் ஓவியம் அவள்.


சரி நண்பர்களே, அத்தனையும் இரசனையோடு மட்டும் இருக்கட்டும்.

அழகான  பெண் என்றாலே, சந்தைப்படுத்தல் பிரிவு ஆடவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனாலும் துரதிர்ஸ்டவசமாக அவள் ஏக்கலையில் தொழில்புரிகிறாள்.

இருந்தபோதிலும் இந்த மெழுகு பொம்மை பற்றி நான் எழுதக் காரணம், அனைவருடைய கவனமும் இந்தப் இளம்பெண் மீது இருப்பதுதான். அழகு என்றாலே ஆபத்துதானே? அது உடனடியாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுவும் பெண் என்றால்??? சொல்லவா வேண்டும்?

இனிவரும் காலம் யாருக்கு ஆபத்தாக இருக்கப்போகிறதோ தெரியவில்லை. எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் இதுவும் கடந்துபோகும் என்பதையும் மனதில்கொள்வோம்.
வாழ்க்கை சிறக்கட்டும்.

(ஸ்ரீலங்கா ஜேர்னலிசம் குழு எனது இந்தக் கட்டுரையை தனது தளத்தில் பிரசுரிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. நானும் குறித்த நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறேன். எனது மின்னஞ்சல் விபரம் வெளியிட வேண்டாம்)

No comments:

Post a Comment