Tuesday, January 3, 2017

மெட்ரோ நியூஸ் சலசலப்பு!


(எல்.தேவ சுகந்தராஜா)

மெட்ரோ நியூஸ் பக்க வடிவமைப்பு பிரிவில் தொழில்புரிந்த சுமன் திறமைசாலி. மெட்ரோ நியூஸை உயர்த்தியவர்களில் அவரும் ஒருவர்.

ஆனால் அவருடைய அமைதியும் பக்குவமான சுபாவமும் காரணமாக அவர் வெளியில் பேசப்படவில்லை. முகாமைத்துவத்துக்கும் அவருடைய திறமை தெரியவில்லை.

வீரகேசரி நாளிதழ், வார இதழ்களில் உள்ள வடிவமைப்பாளர்களுக்கு எந்தளவுக்கு நிறுவனம் அடையாளம் கொடுக்கிறதோ அந்தளவுக்கு மெட்ரோ நியூஸ் வடிவமைப்பாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் எந்தவொரு பயிற்சிக்கும் அனுப்பப்படுவதில்லை. இது நிதர்சனமான உண்மை.

இப்படியிருக்கையில் அண்மையில் சுமன் மாற்றிடத்துக்கு சென்றிருக்கிறார்.
சுமனுக்கு சம்பளம் 17ஆயிரம் ரூபா. இந்த 17 ஆயிரத்தைக் கொண்டு என்ன செய்துவிட முடியும்?

உணவு, வீட்டுக் கூலி, உடை, பிரயாணம், இதர செலவுகள் என எத்தனை இருக்கிறது. அதுவும் ஒரு தந்தையாக இந்த சொற்ப சம்பளத்துக்கு தொழில் புரிய முடியாது.

இதனை அவர் நீண்டகாலமாகவே கூறிவந்திருக்கிறார். ஆனால் யாரும் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை.

உதாரணத்துக்கு இப்படி வைத்துக்கொள்வோம்.

சீனியர் மெனேஜர் ஒருவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. தொழில் நிமித்தம் ஊரிலிருந்து கொழும்பில் வந்து தங்கியிருக்கிறார் என்றால்…

அவர் இந்த சம்பளத்துக்கு வேலை செய்வாரா?

அதேபோல்தான் சுமனுக்கும் அவரது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தவறில்லைதானே? அதற்கு முகாமைத்துவம் எந்தளவுக்கு ஒத்தாசை வழங்கியிருக்கிறது?

ஏனோதானோ என எதேச்சையாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாராயணர்கள் போல சீனியர் மெனேஜர்ஸ் தலையாட்டுவதும் பிடிக்காத சந்தர்ப்பத்தில் வெளியே போ என சொல்லுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ….பழையவர்கள் போய்விட்டால் இளையவர்களை கொண்டு பேப்பர் நடத்தலாம் என்பதுதான்.

அது தவறானது. பழையவர்களின் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? இல்லைதானே? அவர்கள் வீரகேசரிக்காக வாழ்ந்து பழகி ஒத்திசைந்துபோனவர்கள்.

ஆனால் இதனை முகாமைத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை.
இந்த விடயத்தை சொல்லப்போன சாதுராமனுக்கு இப்போது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

சாதுராமன் மிக நேர்மையான தொழில் பக்தி மிக்க மனிதர். அவர் எப்போதும் நேர்மையாக பேசுபவர். அவர் சுமனுக்காக நிறையதடவை வாதாடியும் ஈற்றில் ஆம குஞ்சு (அதாங்க… பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்கின சொங்கி) வெற்றிபெற்றுவிட்டது.

சுமன் விலகிச்சென்ற விவகாரம் இப்போது வேறு விதத்தில் வீரகேசரியை ஆடச் செய்துள்ளது.

அதனை அடுத்த பதிவில் தருகிறோம்.

No comments:

Post a Comment