Thursday, June 16, 2016

சிவகுமாருக்கு எமது பதில்!

சூரியகாந்தி ஆசிரியர் சிவகுமாரன் மின்னஞ்சல் ஊடாக ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டார். வீரகேசரிக்கு எதிராக பொய்யுரைப்பதால் என்ன இலாபம் எனக் கேட்டார். அதற்கு நாம் அளித்த பதில்!


சிவகுமாரன் அவர்களே,


நாம் பொய்யுரைக்கவில்லை. இங்கே நாம் தரும் எந்த தகவலும் உண்மைக்கு புறம்பானவை கிடையாது.

இனிமேலும் அவ்வாறான திட்டமிடல்கள், பழிவாங்கல்கள் இடம்பெறக் கூடாது என்பதே எமது எண்ணம். நாம், சிலரும் இங்கே தான் பணிபுரிகிறோம். எமக்கும் அநீதிகள் இடம்பெறுகின்றன.
  • 12 ஆயிரம் சம்பளம் யாருக்கு போதுமானதாக உள்ளது?
  • தேநீர் அருந்துவதானால் கூட பிச்சைக்காரர்கள் போல வரிசையில் இருக்க வேண்டும். பின்வரிசையில் வருவோருக்கு தேநீர் கிடையாது.
  • முக்கிய புள்ளிகள் மாத்திரமே முகாமைத்துவ இயக்குநரை சந்திக்கலாம். நாம் யார் என்பதை இறுதி வரை அவர் அறிவதில்லை.
  • ஏக்கலைக்கு போக முடிவெடுத்தார்கள். பெரியவர்கள் எல்லாம் காரில் வந்து சென்றுவிடுவார்கள். அவர்களுடைய பிள்ளைகளை பார்த்துக்கொள்ள ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால் எமது நிலை?
  • எல்லோருமே கொள்ளையடிக்கிறார்கள். அது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் கீழ்மட்டத்திலுள்ளவர்கள் மாத்திரமே தண்டனை பெறுகிறார்கள்.
  • சமரவிக்கிரம என்ற எச்.ஆர். ஒரு சட்டத்தரணி. அவர் சட்டத்தரணியாக ஏதாவது ஒரு ஆவணத்தில் (அலுவலகம் சார்ந்து) கையொப்பம் இடுவதானால் கூட பெரியதொரு தொகையை பெற்றுக்கொள்கிறார். இது எத்தனை பேருக்கு தெரியும்?
  • வீரகேசரி கென்டீனை நடத்துவதற்கு ஒரு சிலருக்கு இலஞ்சம் கொடுக்கப்படுகிறது. அங்கு உணவுகள் சுத்தமாக இருக்கிறதா? என்பதை அவதானிக்க யாரும் இல்லை. அங்கு படிப்படியாக விலை அதிகரிக்கப்படுவதும் யாருக்கும் தெரிவதில்லை.
  • கீழே மீன் வளர்க்கிறார்கள். அவற்றின் மீது காட்டப்படும் அக்கறை கூட மனிதர்கள் எம்மீது காட்டப்படுவதில்லை.
  • இங்கே நாம் அமர்ந்திருக்கும் நாட்காலிகளை பாருங்கள். எவ்வளவு கேவலமாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் பழைமையானவை? தினமும் முதுகு வலியோடு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றை யார் கவனிக்கிறார்கள்?


இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம் அன்பரே. இன்னும் இருக்கிறது. எழுதுகிறோம்.

No comments:

Post a Comment