Saturday, June 18, 2016

ஓர் அபலையின் கண்ணீர் எழுத்தாகிறது..!

(ஆசிரியர் - இலங்கை இதழியல்)

(இந்தக் கட்டுரையை எமக்கு அனுப்பியவரின் பெயரை நாம் வெளியிட மாட்டோம். இது உண்மையான சம்பவம்)



நான் ஓர் அழகிய பட்டாம்பூச்சு போல வீரகேசரியில் சுற்றிவந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் என்னைப் போலவே பட்டாம்பூச்சியாக தெரிந்தார்கள்.

மனதில் எந்த சஞ்சலங்களும் துரோக சிந்தனைகளும் என்னிடம் இருந்தில்லை, இப்போதும் கூட அவ்வாறில்லை.

வீரகேசரியில் என் பாதம் படாத இடங்கள் இல்லை. வீரகேசரியை ஒரு கோயில் போல, என்தொழிலை நான் வணங்கும் தெய்வம் போல மதித்து நடந்தேன், இப்போதும் கூட அவ்வாறேதான்.

வெளியுலகத்திலிருந்து பார்த்தபோது வீரகேசரி எனக்கு பிரமாண்டமாகத் தெரிந்தது. சமூகத்தை சீரழிக்க எத்தனைபேர் அவர்கள் அத்தனை பேரையும் வந்தாலும் வீரகேசரி என்ற ஓர் ஊடகத்தினால் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

அதேபோல் இதழியலில் உள்ள ஆர்வம், சமூகத்தின் மீதுள்ள அக்கறையில் பணியாற்றினேன்.

சமூகம் சார்ந்த ஊடகத்தில் வெட்டுக்குத்துகள் இல்லை, பிரதேச வேறுபாடுகள் இல்லை, ஒருவருக்கொருவர் மறைமுகமாக தாக்கிக்கொள்ளும் எண்ணமில்லை என நினைத்திருந்தேன். 

தூய்மையின் அடையாளமாக எங்கள் கிராமத்து கோயிலுக்கு அடுத்தபடியாக வீரகேசரியை நினைத்தேன்.
என் பாடசாலைக்குப் பிறகு நான் கற்றுக்கொள்ள அடுத்த கலைக்கூடமாக  நான் நினைத்திருந்தேன்.

ஆனால் அந்த அத்தனை எதிர்பார்ப்புகளும் சவர்க்கார நுரைபோல கரைந்துபோயின.

இன்றும் நான் அன்றுபோல் வீரகேசரியை நேசிக்கிறேன். ஆனால்…. அங்குள்ள மனிதர்கள் சிலர்?

பிரதேசவாதத்தை காரணம் காட்டி எனக்கு எழுதத் தெரியாது என்றார்கள். யாருடன் கதைத்தாலும் காதல் என்றார்கள்.
வீரகேசரி வாசலில் இருந்து சகோதரனுடன் கதைத்தால் கூட எங்கேயாவது ரூமுக்கு போய் வந்திருப்பாள் என்பார்கள்.

சரி போகட்டும் என எல்லாவற்றையும் சகித்துக்கொண்டேன்.

நீதி, நியாயம், சமதர்மம், சமபால் விகிதம், தொழிலாளர் நலன் என்பன பற்றியெல்லாம் வீரகேசரி ஆசிரியர் தலையங்கம் நன்றாகப் பேசும். ஆனால் எம்போன்ற, குரல்கொடுக்க யாருமில்லா ஜீவன்களின் குரல்கள் இறுதிவரை முடங்கியே போகும்.

நாம் யாருக்கு என்ன துரோகம் செய்தோம். சமூக அக்கறைக்காக அரசியலுக்கு போகாமல் வீரகேசரிக்கு வந்ததுதான் தவறா?

இதுவே, உங்களுடைய மகள், உங்களுடைய தாய், உங்களுடைய சகோதரி என்றால் இப்படியெல்லாம் வதந்திகளை கதைக்க உங்களால் முடியுமா? அதற்கு மனச்சாட்சியுள்ள மனம்தான் இடம்கொடுக்குமா?

ஒரு பெண்ணுக்கு ஆண்துணை தேடும்போது நிச்சயமாக தொழில் இடத்தில் விசாரிப்பது வழக்கம். அவ்வாறு விசாரிக்கும்போது இங்கே உள்ள ஒருசில பெரும் தலைகள் என்னைப் பற்றி எப்படிக் கேவலமாக கதைத்துள்ளார்கள் தெரியுமா?

அவர்களின் பெயர்களை எல்லாம் இங்கே வெளியிட முடியும். ஆனால் அவ்வாறு வெளியிட்டால் அந்தக் கீழ்த்தர ஜென்மங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை தானே?

ஒரு நல்ல பெண்ணாக, நல்ல மனமுடையவளாக நான் எல்லோருடனும் சகஜமாக பழகினேன். ஓர் ஊடகவியலாளர் என்றால் அந்த பண்பு கட்டாயம் தேவை. ஆனால் அதனையே மறுபுறம் தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்பவர்கள் தான் வீரகேசரியில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சனிக்கிழமை நான் தனியாகத்தான் இருப்பேன், எங்கேயாவாது லன்ச் க்கு போவோமா என கேட்ட உயர் அதிகாரிகளும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு அவ்வளவு தேவை என்றால் தங்களுடைய மகள்களையும் சகோதரிகளையும் கூட்டிக்கொண்டு போகலாமே என என் மனம் கேட்கத் தூண்டும். 

யாருடனும் பழகாதவர்கள் போல காட்டிக்கொள்ளும் கணக்கீட்டுப் பிரிவிலுள்ள சிலர் பேஸ்புக்கிலும் வைபரிலும் எனக்கு கொடுக்காத தொந்தரவே இல்லை.


அதற்கு என்னோடு நெருக்கமாக பழகும் ஊடகவியல் நண்பர்கள் எவ்வளவோ சிறந்தவர்கள்.
எதற்குமே சாய்ந்துகொடுக்காததால் கடைசியில் எனக்கு கிடைத்த பெயர் என்ன தெரியுமா?
'வேலை தெரியாதவள்'

வீரகேசரியில் 15 வருடங்களாக வேலை செய்பவர்கள் இன்னும் 20 ஆயிரம் சம்பளத்தோடு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சாபம் விட்டுக்கொண்டே தான் வேலைக்கு வருகிறார்கள்.

எங்கள் அனைவரினதும் சாபமோ என்னவோ, ஏக்கலையில் கோடிக்கணக்கான பணம் கரைந்துபோய்விட்டது. இனி சிங்களவர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு வேலை செய்யவேண்டியதுதான்.
வேறு வழி தெரியாதவர்களும் பெரியவர்களுக்கு குனிந்துகொடுப்பவர்களுக்கும் இனி அங்கு நல்ல எதிர்காலம் உண்டு.

(நான் தொடர்ந்தும் எழுதுவேன்.)

1 comment:

  1. ஏன் வீரகேசரி பிரபாகரன் இருக்கிறாறே அவரும் அங்கு வேலை செய்யும் பெண்களை வா நாங்க T SHIRT SALE போட்டு இருக்கு. PHONE COVER வாங்கி வருவோம் முச்சக்கர வண்டியில் போய் வருவோம் என்று எல்லாம் கூப்பிடுவாராம் .அதுவும் தனியாக போக கூப்பிடுவாராம் என்ட நண்பி சொல்லி இருக்கிறாள். அப்புறம் இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை பெண்கள் புடை சூழ நடுவில் அவர் அமர்ந்து தூர இடங்களுக்கு சுற்றுலா போக வேண்டும்.அதுவும் அருமை காதலி தேவி அருகில் அமர்ந்திருக்க வேண்டுமாம் . அவருடன் யாரும் சுற்றுலா வராவிட்டால் அவர்களுக்கு உடனே வெட்டு விழுந்து விடும்.இனி என்ன செய்ய அதற்கு பயந்து அங்கு வேலை செய்பவர்களும் கிடைக்கின்ற 12000, 15000 சம்பளத்தில் ஒரு ஐயாயிரம் ரூபாவை ஓதுக்கி சுற்றுலா செல்வார்கள் .பின் அந்த மாத செலவுகளுக்கு சி்க்கலில் கடன் வாங்குவார்கள்

    ReplyDelete