Wednesday, June 15, 2016

தேவராஜை மீண்டும் கொண்டுவர திட்டமிடுகிறது வீரகேசரி

(த. நரசிம்மன்)


வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் வடிவேல் தேவராஜை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது வீரகேசரி முகாமைத்துவம்.





இதழியல் தர்மத்தையும் நேர்மையையும் சரியாக கடைபிடித்த நபர் அவர்தான் என இப்போது பலர் பேசிக்கொள்கிறார்கள். குறிப்பாக அவருக்கு பெண்கள் மீது ஆசை கிடையாது.


அவர் நான்கு பிரதான பத்திரிகைகளை தனி மனிதராக இருந்து நடத்தியவர். அத்துடன் தனது உத்தியோகத்தர்களை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார்.

(வீரகேசரி வார வெளியீடு, மித்திரன், மெட்ரோ தினசரி, வார வெளியீடுகள்)



அதுமாத்திரமல்ல இதழியலில் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்க விதிகளை சரியாக கடைபிடித்து வந்தார்.


ஆனால் அவரிடமுள்ள கெட்ட புத்தி என்னவென்றால் யார் என்ன சொன்னாலும் அதனை நம்பி கேவலமாகிவிடுவார்.

ஆசிரிய பீடத்தின் முகாமைத்துவத்தை முறையாக கடைபிடித்துவந்த தேவராஜை மீண்டும் வருமாறு அனுகியிருக்கிறது வீரகேசரி.


தற்போதுள்ள ஆசிரியர்கள் மீது நம்பிக்கையீனமே இதற்கு காரணம். ஏனென்றால் செய்தியை எழுதுவதிலும் அதன் நம்பகத்தன்மையை பேணுவதிலம் தற்போதுள்ளவர்கள் காட்டும் மெத்தனப்போக்கு.

வீரகேசரிக்கு மீண்டும் செல்வதில் கொஞ்சம் ஆர்வம் உள்ளதாகவும் ஆனால் தனக்கு நம்பிக்கையானவர்களை மீண்டும் ஆசிரிய பீடத்துக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தேவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் செய்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கசிந்தது. ஆனால் வெள்ள காக்கா, தேவாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரபல சட்டத்தரணி (தேவாவின் சகா) ஒருவரை நாடியுள்ளார். அவரின் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

தனபாலரின் வருகை குறித்த செய்தியொன்றை நாம் தருவதாக உறுதியளித்திருந்தோம். இந்தச் செய்தியின் வருகை காரணமாகவும் ஒருசில தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் கொஞ்சம் கால அவகாசம் கோரி நிற்கிறோம்.

(வீரகேசரியில் நேற்று கொஞ்சம் பரபரப்பாகத்தான் காணப்பட்டது. ஏனென்றால் இரகசியமாக நடந்தேறியதை நாம் அம்பலப்படுத்திவிட்டோம்)




No comments:

Post a Comment