Saturday, July 23, 2016

மகிழ்ச்சி..!

- இ.திருச்சக்கரன் - 

வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கம் இயங்காமை பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

அந்த சங்கத்தின் தலைவர் பிரேம் பாவம். திமிர்பிடித்த முதலாளி சமூகம் மற்றும் எதேச்சதிகாரமாக இயங்கும் முகாமைத்துவத்தின் போக்குக்கு மத்தியில் கூழா மீசையா என்ற நிலையில் இருக்கிறார் அவர்.

தலைவர் ரஜினியின் கபாலி திரைப்படத்தை வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்து ஓரளவுக்கு பண வருமானத்தை பெற்றிருக்கலாம். ஆனால் அது நிர்வாக்தின் கடும்போக்கினால் தடுக்கப்பட்டுள்ளது.





இதுவே, வாசுவாக செந்தில்நாதனாக தயாளனாக மேல்மருவத்தூர் அமுனுகமவாக பிரபாகனாக இருந்திருந்தால் (தலைவராக) இன்றைய நிலைமை வேறு. கபாலி எந்தளவுக்கு வெற்றியோ அந்தளவுக்கு வீரகேசரி நலன்புரிச் சங்கத்தின் வருமானமும் அதிகரித்து இந்நேரம் பிரேம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பார்.

ஆனால் நடந்தது, நடப்பது என்ன?

எல்லாவற்றுக்கும் காரணம் பிரேம் அன்று ஆற்றிய கன்னி உரைதான். அதில் சாதாரண ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என ஆணித்தரமாக கூறிவிட்டார்.

அவர் கூறியது அத்தனையையும் செந்திலின் வாயிலாக குமார் நடேசன் மொழிபெயர்ப்பு செய்து காதில் வாங்கிக்கொண்டார்.

இனியென்ன அவர்களின் எஜென்டா படியே அனைத்தும் நடக்கிறது.
வீரகேசரி ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் அடுத்த தலைமை பதவிக்கு ரேணுகா பிரபாகரன் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் அவருக்கு முடியாது என்று விலகிக்கொள்வார். மீண்டும் அவ்விடத்துக்கு மேல்மருவத்தூர் அமுனுகமவின் ஆசையின் பிரகாரம் நவீனன் நியமிக்கப்படுவார்.

இதுவே வீரகேசரியின் நியதியாகும்.
அதற்குப் பிறகு பழையபடி சங்கம் மீண்டு எழும். அதற்காக முகாமைத்துவத்தின் அனைத்து உதவிகளும் ஒத்தாசைகளும் நவீனனுக்கு வழங்கப்படும்.


அன்பரே பிரேம்,
நீங்கள் பயந்து ஒதுங்கிவிடாதீர்கள். உங்களுக்கு கரம் கொடுக்க நாம் இருக்கிறோம். உங்களது பெயர் வீரகேசரி வரலாற்றில் இடம்பிடிக்கும் வண்ணம் சிறந்த திட்டமிடலுடன் செயற்படுங்கள். வெற்றி உங்கள் வசம். நாம் உழைப்பாளர்கள், கடுமையான உழைப்பாளர்கள். எமக்கு பேதங்கள் கிடையாது. ஆதலால் கடவுள் எங்களை கைவிடமாட்டார்.

எங்களது உழைப்பினால் முன்னேறும் கம்பனியின் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்துக்கும் நமக்கும் வெகு தூரம். அவர்கள் கொள்ளையடிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் இல்லாமல் போகும் என்பது மட்டும் திண்ணமான உண்மை.

கபாலியினால் மகிழ்ச்சியடைபவர்கள் மகிழ்ச்சியடையட்டும். நமக்கு வெற்றி வெகுதூரமில்லை.

நாம் என்றும் உங்களுடன்.



No comments:

Post a Comment