Wednesday, July 6, 2016

ஒரு சிங்களப் பேப்பரின் சுயசரிதை


(மொஹமட் சுபைர்தீன்)
வீரகேசரியில் இருந்து வெளியாகும் சிங்களப் பேப்பரின் பெயர் சியதெச. ஆரம்பத்தில் ஜவய என்ற பெயரில் வெளிவந்தது. அது பொருத்தமற்றது என சந்தச என்ற பெயரில் வெளியாகியது.


தற்போதுதான் சியதெச என்ற பெயரில் வெளிவருகிறது. விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் தமிழ் பத்திரிகையொன்றை வெற்றிகரமாக வெளியிட்டு வருகிறது. அதற்கு நேரெதிராக வீரகேசரி நிறுவனம் சிங்களப் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எனினும் இது எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்றால் பதில் பூச்சியமே.


பத்திரிகையை நிறுவவதற்கு நீண்டகாலம் எடுத்தது. ஆட்களை தெரிவு செய்து சாம்பிள் பேப்பர் செய்து ப்ரமோஷன் செய்து இப்படி பல வேலைகள் இடம்பெற்றன. ஆனாலும் கையாலாகாத முகாமைத்துவத்தின் பிழையான வழிகாட்டல்களே இந்தப் பத்திரிகை கீழ்நிலைக்கு சென்றதற்கான காரணமாகும்.


இந்தப் பத்திரிகைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மித்திரனுக்கோ, சூரியகாந்திக்கோ, மெட்ரோவுக்கோ வழங்கப்படுவதில்லை. அது குறித்த அக்கறையும் பெரிவர்களுக்கு கிடையாது.


இத்தனை பத்திரிகை நடத்துகிறோம் இத்தனை மெகசின் வெளியிடுகிறோம் என வெளியில் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் ஊழியர்கள் என்னவோ பிச்சைக்காரர்கள்தான்.


வீரகேசரியில் 20 -25 வருடம் வேலை செய்த, செய்யும் சாதாரண ஊழியர்கள் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார்கள் என்ற வரலாறு உண்டா தோழர்களே? இல்லைதானே?

மீடியா டிப்பார்ட்மன்டில் வேலை செய்த ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு தொண்டையில் புற்றுநோய் என்பது ஆரம்பகாலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை சத்தமாக வாசிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதனை முகாமைத்துவம் கவனத்திற்கொள்ளவில்லை. தனது வருத்தம் என்னவென்று சமரவிக்ரமவிடம் சொல்லும் அளவுக்கு சிங்கள அறிவும் கிடையாது திராணியும் கிடையாது.

தொடர்ந்து சத்தமாக வாசித்ததால் அவருக்கு வருத்தமும் அதிகமானது. அதனால் அவர் உயிர்நீத்தார்.

அவரது மரணச் சடங்குக்கு எத்தனை பெரியவர்கள் வந்தார்கள்? உங்கள் மனச்சாட்சியை நீங்களே கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் இதே நிலைமைதான். ஏன்னதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் உங்களை அந்த நிறுவனம் தூக்கி வைத்து கொண்டாடாது.

சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் ஹேரத் என்பவருக்கு சம்பளமாக 1 இலட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. டைப்செட்டர்ஸ் முதல் பயிலுனர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 17 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நல்ல திட்டமிடல் என்று சொல்லிக்கொண்டாலும் கடைசியில் எல்லாவற்றையும் சொதப்பிவிட்டார்கள். ஆரம்பத்தில் 7 ஆயிரம் இதழ்களுக்கு ஓடர் கிடைத்தது.

ஆனால் போகப்போக தற்போது ஆயிரம் கூட விற்பனையாவதில்லை. என்னதான் இருந்தாலும் சமரவிக்ரமவும் அமுனுகமவும் இந்த சிங்களப் பேப்பரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என விடாப்பிடியாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை.

காலி,மாத்தறை,அநுராதபுரம் போன்ற சிங்கள பகுதி விற்பனையாளர்களிடம் நாம் கதைத்தோம். நீண்ட வரலாறுடைய பிரபலமான பத்திரிகைகள் இருக்கும்போது இதை யார் வாங்கப்போகிறார்கள்? எமக்கு கொமிஷன் தருகிறார்கள் என்பதற்காக வைத்திருக்கிறோம் என்றார்கள் அவர்கள்.

நடேசனுக்கு மானப் பிரச்சினை என்பதால் இந்தப் பத்திரிகையை நட்டத்திலும் நடாத்துகிறார் என்பதுதான் வெளிப்படை.




No comments:

Post a Comment